வெள்ளி, 22 செப்டம்பர், 2023

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் குறைகேட்பு மனு பெற்றார்

 தூத்துக்குடி லீக்ஸ் 23-9-2023

த.சண்முகசுந்தரம் மூத்த பத்திரிகையாளர் 

     தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிமக்களிடமும் தனது இல்லத்தில் உள்ள அலுவலகம் டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரில் அமைச்சர் கீதாஜீவனிடம் வழங்கி வருகின்றனர் 



இந்நிலையில் தொகுதிக்குட்பட்ட ஓவ்வொரு வார்டு பகுதியாக அரசு துறை அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களிடம் குறை கேட்பு நிகழ்வும் நடைபெற்று வருகிறது.


 அதில் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு குறைகள் தீர்க்கப்படுகின்றன. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி சாலை வசதி கால்வாய் வசதி புதிதாக அமைத்து கொடுக்கப்படுகிறது. 

    முத்தையாபுரம் சுந்தர்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார் 


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவ ன்பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையான எந்த பணிகளுமே நடைபெறவில்லை. அதிலும் குறிப்பாக மாநகராட்சி உள்ளடக்கிய பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமலும் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாமலும் இருந்ததால் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாமலும் இருந்தது. திமுக ஆட்சி அமைந்த பின் தளபதியார் மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும். என்று கூறியதின் அடிப்படையில் உங்களையெல்லாம் சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம். இந்த பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக செய்து கொடுக்கப்படும். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம். என்று கூறினார். 

மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், பொறியாளர் சரவணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் ராஜதுரை, முத்துவேல், சுயம்பு, விஜயகுமார், பட்சிராஜ், பகுதி செயலாளர் மேகநாதன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் நடேசன் டேனில், பிரசாந்த், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக