தூத்துக்குடி மாவட்டம்: 22.09.2023
தூத்துக்குடி கூட்டுறவு வங்கியை பயன்படுத்தி 53 லட்சம் மோசடி மூன்று பேர் கைது காவல்துறை அதிரடி
தூத்துக்குடி கூட்டுறவு வங்கியின் காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி தனியார் நிதிநிறுவனத்தில் ரூபாய் 53 லட்சம் மோசடி செய்த 3 கைது - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் முத்துராஜா (எ) முத்துராஜ் (45) என்பவர் தூத்துக்குடி கீழுர் கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணி செய்தபோது, மேற்படி கூட்டுறவு வங்கியின் காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி, அவருக்கு தெரிந்த தூத்துக்குடி அழகேசபுரம் மெயின்ரோடு, பொன்நகரம் பகுதியை சேர்ந்த மகாராஜன் மகன் பரமசிவன் (50) மற்றும் தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சேதுராமலிங்கம் (53) ஆகியோருடன் கூட்டுசேர்ந்து திட்டம்போட்டு, தூத்துக்குடியை சேர்ந்த 22 நபர்களிடம் தூத்துக்குடி கூட்டுறவு வங்கியில் சிறுதொழில் செய்வதற்கு கடன் தருவதாக கூறி, அவர்களிடம் அவர்களுக்கு உரிமையில்லாத மேற்படி முறைகேடான காசோலைகளில் கையெழுத்துக்களை பெற்றுள்ளனர்.
அவ்வாறு கையெழுத்து பெற்ற 22 காசோலைகளை தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்த சின்னத்துரை மகன் ராஜா (33) என்பவருக்கு சொந்தமான பபிதா நிதி நிறுவனத்தில் உண்மையானது போன்றும், அதனுடன் மேற்படி 22 நபர்களின் ஆதார் கார்டு நகல்களையும் சேர்த்து மேற்படி நிதி நிறுவனத்தில் தாக்கல் செய்து கடனாக ரூபாய் 52,85,000/- பணத்தை மோசடியாக பெற்று மேற்படி எதிரிகள் 3 பேரும் சுயலாபம் அடைந்தும், பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் நம்பிக்கை மோசடி செய்தும், கடன் தொகையை திருப்பி கேட்ட மேற்படி நிதிநிறுவனத்தின் உரிமையாளரான ராஜாவிடம் எதிரிகள் 3 பேரும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி ராஜா அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர். சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையற்கரசி தலைமையில் உதவி ஆய்வாளஅனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி, முருகன் மற்றும் தலைமை காவலர். வேல்ராஜா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்
இதையடுத்து முத்துராஜா (எ) முத்துராஜ் என்பவரை திண்டுக்கல்லில் கைது செய்தனர பின்பு பரமசிவம் மற்றும் சேதுராமலிங்கம் ஆகியோரை தூத்துக்குடியிலும் வைத்து நேற்று கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக