thoothukudileaks 26-9-2023
Photo news by sunmugasunthram
தூத்துக்குடி அதிமுக சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பிஜேபி உடனான கூட்டணி இனி இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் புதிய மாநகராட்சி அருகில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில்
முன்னாள் இளைஞர் இளம்பெண் பாசறை தலைவர் சி.த.செ. ராஜா சிங் தலைமையில்..
முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், தெற்குபகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் பொறுப்பு சிவசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், முன்னாள் வட்டச்செயலாளர்கள் கோட்டாளமுத்து, சங்கர், பாபநாசம், கெய்னஸ், சீனிவாசன், சகாயராஜ், அசோகன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு முன்னாள் மாநில துணைத்தலைவர் டெரன்ஸ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முன்னாள் மாவட்ட மீனரவணி இணைச்செயலாளர் துரைபாண்டியன், மற்றும் மனோகர் மூக்கையா, அந்தோனிராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாகிர், ஆறுமுகநயினார், சுப்புராஜ், காசி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக