தூத்துக்குடி மாநகராட்சி 60 வது வார்டு பகுதி சபா கூட்டம். நடைபெற்றது
60- வது வார்டு உட்பட்ட கோயில்பிள்ளை நகரின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் காத்திட உடனடியாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோயில்பிள்ளை நகர் அபிவிருத்தி சங்க
செயலாளர் ராஜா வேண்டுகோள் விடுத்தார்.
இதுபற்றி செய்தியாவது:-
இன்று 15/09/23
60 வது வார்டு பகுதி சபா கூட்டம்....
பொதுமக்கள் குறை தீர்க்கும் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர் பாலகுருசாமி தலைமையில் மாநாகராட்சி
பகுதி சபா செயலாளர் முத்து முன்னிலையில்
கோயில்பிள்ளை நகர் அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் ...
கோயில்பிள்ளை நகரின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் காத்திட உடனடியாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோயில்பிள்ளை நகர் அபிவிருத்தி சங்க
செயலாளர் ராஜா வேண்டுகோள் விடுத்தார்.
அதன் விவரமாவது:-
01 ) கோயில்பிள்ளை நகரின் நுழைவாயிலில் இராட்சத மின் விளக்குகள் அமைத்திட வேண்டும்.
02 ) கோயில் பிள்ளைநகர் பிரதான சாலையின் இரு புறத்திலும் நடை பாதை அமைத்து தர வேண்டுகிறோம்.
03 ) கோயில்பிள்ளை நகர் பிரதான சாலையில் செல்லும் உயர்மின்னழுத்த கம்பி வழித்தடத்தினை உடனடியாக மாற்றி அமைத்திட ஆவண செய்ய வேண்டுகிறோம்.
04 ) கோயில் பிள்ளை நகரில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பொழுது போக்கிட பூங்கா அமைத்து தர வேண்டுகிறோம்.
05 ) கோயில் பிள்ளை நகரில் உள்ள இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நூலகம் மற்றும் உடற்பயிற்சி நிலையம் அமைத்து தர வேண்டுகிறோம்.
06 ) கோயில் பிள்ளை நகரில் உள்ள மின் கம்பங்கள் அனைத்திலும் உள்ள மின்கம்பிகள் தாழ்வான நிலையில் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக செல்வதால் உடனடியாக அதனை உயர்வாக செல்லும்படி செய்திட வேண்டும்.
மேலும் மின்கம்பங்கள் நிறைய தெருவிளக்குகள் இல்லாமல் இருப்பதால் மக்கள் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகுந்த அச்ச உணர்வுடன் செல்ல வேண்டி இருந்தது . ஆதலால் மின் விளக்குகள் இல்லாத மின்கம்பங்களில் உடனடியாக மின்விளக்குகள் பொருந்தி தர வேண்டுகிறோம்.
07 ) SEPC பவர் பிளான்ட் மற்றும் கோயில் பிள்ளை நகர் இடையேயான நிலத்தில் அதிகப்படியாக மரங்களை வளர்த்து பராமரித்து நகரின் மக்கள் நல்ல காற்றினை சுவாசிக்க ஆவண செய்ய வேண்டும்.
08 ) மழைக் காலங்களில் மன்னாரையா & சன்ஸ் நிறுவனத்திலிருந்து கோயில் பிள்ளை நகருக்குள் மழை நீர் வடியாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
09 ) தூத்துக்குடி துறைமுகம், தூத்துக்குடி அனல் மின் நிலையம், NTPL, SEPC, ஸ்பிக், டேக், IOC போன்ற பெரும் நிறுவனங்களால் நேரடியாக பாதிக்கப்படக் கூடிய மக்கள் மற்றும் பகுதி நாங்கள் ஆகையால் அவர்கள் செய்ய வேண்டிய சி எஸ் ஆர் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி ( Corporate Social Responsibility) மூலம் செய்யும் திட்டங்களை பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று செய்கிறார்கள். அதனை தடுத்து அந்த நிறுவனங்களால் நேரடியாக பாதிக்க கூடிய பகுதிகளை அந்த நிறுவனங்கள் தத்து எடுத்திடவும் அப்பகுதியின் வளர்ச்சி மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்திட ஆவண செய்ய வேண்டும்.
10 ) கோயில் பிள்ளை என்பவர் தூத்துக்குடி துறைமுகத்தின் முதல் நிர்வாகியும் தலைமை பொறியாளரும் ஆவார். ஆரம்ப கட்டத்தில் துறைமுகத் திட்டத்தினை கொண்டு வந்ததும் மத்திய மாநில அரசுகளுக்கு துறைமுகத்தின் பலன் வருங்காலத்தின் வளர்ச்சி மற்றும் அரசுக்கான வருவாய் அனைத்துமே கணக்கிட்டு அவர்கள் புரியும் படி செய்து தூத்துக்குடி துறைமுகத் திட்டத்தினை உருவாக்கி இன்று தூத்துக்குடி மட்டுமல்லாது தென் தமிழகமே தொழில் வளர்ச்சி பெற்றிட வித்திட்டவர் திருக்கோயில் பிள்ளை ஆவார் அவரது நினைவாக நம் திருச்செந்தூர் ரவுண்டானாவில் அமைந்துள்ள மேம்பாலத்திற்கு அவரது பெயரை வைப்பதுடன் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள இடத்தில் அவருக்கு ஒரு சிலை அமைத்திடவும் வேண்டுகிறோம்
கூட்டத்தில் கோயில்பிள்ளை நகரில் உள்ள ஹீராஜான், வேலு ராஜ்குமார், ஜாஸ்லின், மாயகிருஷ்ணன் தேவதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அனல்மின் நிலையத்தின் முகாம் I உதவி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் மின் வாரிய குடியிருப்பு உறுப்பினர்களுக்கு தேவையான கோரிக்கைகளை வைத்தனர். அதே போல லேசர் காலணியில் உள்ள மக்கள் வீரபத்திரன் தலைமையில் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்வு காண வேண்டினார்.
பகுதி சபா கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்..
பகுதி சபா கூட்ட உறுப்பினரும் அனல்மின் நிலைய முகாம் I உறுப்பினர்களில் ஒருவரான ராபின் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக