வெள்ளி, 15 செப்டம்பர், 2023

IMPAஇன்டர்நேஷனல் முதலியார் பிள்ளைமார் அசோசியேஷன் சார்பில் தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்

 thoothukudileaks 15-9-2023

photo news by arunan journalist 

தூத்துக்குடியில் .பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு IMPAஇன்டர்நேஷனல் முதலியார்& பிள்ளைமார் அசோசியேஷன் சார்பில் தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து இனிப்பு  வழங்கினார்கள்

இதுபற்றி செய்தியாவது 

 .பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 115வது பிறந்தநாள்  IMPAஇன்டர்நேஷனல் முதலியார் &பிள்ளைமார் அசோசியேஷன் தலைவர் விஜித் M ராஜா தலைமையில் ..

இன்று 15-9-2023 தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகம் வளாகத்தில் இருக்கும் அறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்



இந்நிகழ்ச்சியில்...IMPAஇன்டர்நேஷனல் முதலியார் பிள்ளைமார் அசோசியேஷன் செயலாளர் A ராஜா சகோவ், b2b சேர்மன்  எஸ்.குத்தாலலிங்கம்  மாவட்ட நிர்வாகிகள் எஸ். அருண்,வி.கார்த்திகேயன், உதயகுமார் ,கணேஷ் வைத்தியலிங்கம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


வீடியோ பார்க்க 


அறிஞர் அண்ணா பற்றி சிறுகுறிப்பு

1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில்  நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்குபிறந்தவர் அண்ணா 



.சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர்.

இந்த ஊடகங்களில் பிற திராவிட இயக்கப் படைப்பாளிகளும் அணி அணியாக நுழைந்து தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர்.

காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர். தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். 



நமது  தமிழின் மீது உயிராக இருந்தவர், 

தமிழ் மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது

எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டியவர் அண்ணா. தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக உணரத் தொடங்கிய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அசைக்கமுடியாத ஓர் அங்கீகாரமாகிவிட்டது இந்தப் பெயர்.அண்ணா

தமிழக த்தில் அனைத்து பெருநகரங்களில் அண்ணா நகர் அண்ணா நகர் என்ற  பெயரே எங்கெங்கும் காணப்படும் தமிழகத்தில் மாமனிதர் என்றால் அண்ணா ஒருவர் தான் வேறுயாரும் கிடையாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக