செவ்வாய், 12 செப்டம்பர், 2023

14 பஞ்சாயத்து சுற்றுவட்டார கிராம பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தூத்துக்குடி கலெக்டர் மற்றும் கனிமொழி எம்பி மற்றும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்கள் கோரிக்கை!!!

 thoothukudileaks 12-9-2023

photo news by arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம் 14 பஞ்சாயத்து சுற்று வட்டார கிராம பகுதிகளில் கடும்குடிநீர் பஞ்சம் நிலவுகிறது எனவும் கலங்கல் ஏதுமின்றி சுத்தமான நல்ல குடிநீர் விநியோகம் வழங்கிட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் மற்றும் கனிமொழி எம்பி மற்றும் அமைச்சரிடம் நேரில்  தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்கள் கோரிக்கை மற்றும் மனு அளித்தனர்.

Dr.s ராஜேஷ் குமார் 
மாவட்ட தலைவர்
ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்புதூத்துக்குடி மாவட்டம 


இது பற்றிய விவரமாவது :-

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உமரிகாடு ஊராட்சி மாவட்ட தலைவர் ராஜ்குமார் இன்று (12-9-2023) காலையில் 11மணியளவில்

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்கள் கோரிக்கை  மனு வில் குறிப்பிட்ட தாவது:-


பெறுநர்:

உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,

தூத்துக்குடி.

பொருள்:

 

வாழவல்லான் சுத்திகரிப்பு நிலையதிலிருந்து குடிநீர் செல்லும்

சுற்றுவட்டார கிராமங்களில் நிலவும் கடுமையான

பஞ்சத்தை குடிநீர் போக்க வேண்டி மனு.

மதிப்பிற்குரிய ஐயா


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேற்கே 

அமைந்துள்ள பொன்னங்குறிச்சி-யிலிருந்து வரும் தாமிரபரணி தண்ணீரை

மேல ஆத்தூர், மஞ்சள்நீர்காயல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொடுத்து

பல்வேறு ஊர் மக்களுக்கும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும்

விநியோகம் செய்வது போல, ...


வாழவல்லான் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும்

வழங்கி உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை, அகரம், மாரமங்கலம்,

முக்காணி, கொட்டாரக்குறிச்சி, ஆறுமுகமங்கலம், இடையற்காடு, பழையகாயல்,

முள்ளக்காடு, குலையன் கரிசல், கோவங்காடு, மஞ்சள் நீர் காயல் ஆகிய

 14பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் வருடம் முழுவதும் மக்களுக்கு

வழங்கி குடிநீர் விநியோகம் செய்திட வழி செய்ய வேண்டுகிறேன். 

இதன் மூலம்

வருடா வருடம் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்தை போக்க

முடியும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


இப்படிக்கு,

President

Village Panchayat

Dr.S. ராஜேஷ்குமார்

தலைவர்

உமரிக்காடு ஊராட்சி

மாவட்ட தலைவர்

ஊராட்சி தலைவர்கள் மாவட்ட கூட்டமைப்பு

தூத்துக்குடி மாவட்டம்


 15 வருடத்திற்கு மேலாக சுத்தமான குடிநீர் இன்றி மிக கலங்கலான மஞ்சள் நிற வெளுப்பு ஏறிய தண்ணீர் குடித்து அவதி படுகிறோம் தாங்கள் எங்கள் கிராமப்பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம் ( கலெக்டர் இடம் காட்ட வெளுப்பு ஏறிய கலங்கல் தண்ணீரை பாட்டிலில் அடைத்து கொண்டு வந்து காண்பித்தனர்.)

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக