செவ்வாய், 12 செப்டம்பர், 2023

5000 பேர் வாழ்வதாரத்தை இழக்கிறோம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் இடம்தூத்துக்குடி மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர்போர்வெல் இருந்து லாரி மூலம் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்வதற்கும் டாரஸ் லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்ய அனுமதி வழங்கி எங்கள் வாழ்வதாரத்தை மீட்டுத்தரும்படி மனு அளித்தனர் .

thoothukudileaks 12-9-2023

photo news by arunan journalist 

 5000 பேர் வாழ்வதாரத்தை இழக்கிறோம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் இடம் இன்று தூத்துக்குடி மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் போர்வெல் இருந்து லாரி மூலம் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்வதற்கும் டாரஸ் லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்ய அனுமதி வழங்கி எங்கள் வாழ்வதாரத்தை மீட்டுத்தரும்படி இன்று (12-9-2023 )காலை 1மணியளவில் மனு அளித்தனர் . 



பின்பு செய்தியாளர்களை சந்தித்து 5000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வதாரத்தை இழக்கிறோம் என பேட்டியளித்தார்கள்

இதனால் 50 க்கும் மேற்பட்ட வர்கள் அப்பகுதியில் திரளாக வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம்

எங்கள் சங்கத்தில் சுமார் 150 லாரிகளும், 40 டிராக்டர்களும், 50

TATA ACE 20 வாகனங்களும் தண்ணீர் விநியோகம் செய்வதற்காகப்

பயன்படுத்துகிறோம். இதன் மூலம் வல்லநாடு சேர்வைக்காரண்மடம், கட்டாலங்குளம்,

முடிவைத்தானேந்தல்,

வர்த்தகரெட்டிபட்டி, திம்மராஜபுரம்,

அல்லிக்குளம், புதுக்கோட்டை, மேலக்கூட்டுடன்காடு, கல்மேடு, ஒட்டப்பிடாரம்

ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீரை எடுத்து வந்து தூத்துக்குடியில் உள்ள

அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் குடிநீர் பைப் லைன் வழங்காத பகுதிகளில்

உள்ள வீடுகள் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள்,

சமூகநலக்கூடங்கள் மற்றும் 22 ஐஸ் Plant, மீன்பிடி துறைமுகம், உபப்ளங்கள்

மற்றும் கடல்சார் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், கட்டுமானபணிக்கு

மற்றும் தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில்

ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தேவையின் அடிப்படையில் வாரிகள் மூலம்

குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம்.

இதனை மேற்கண்ட ஊரில் உள்ள சில நபர்கள் எங்களுக்கு எதிராக

செயல்பட்டுக் கொண்டும் லாரிகளில் தண்ணீர் பிடிக்க எங்களுக்கு பணம்

தரவேண்டும் என்றும், கொடுக்காத பட்சத்தில் லாரியை மறிப்பது போன்ற

செயல்களை செய்கிறார்கள். 


மேலும், அரசாங்கத்திற்கு மனு மேல் மனு

அனுப்புவதாக அறிகிறோம்.

மேலும் ஒரு கிராமத்தில் போர்வெல் சீல் வைத்தவுடன் அடுத்து உள்ள ஊர்களுக்கு தண்ணீர் பிடிக்க லாரிகள் செல்லும்போது அங்கு

எண்ணிக்கை அதிகமாகிறது (கூட்ட நெரிசல் ஏற்படுகிறது). 


மேலும் நாங்கள் சுமார் 30 ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகிறோம்.




 கடந்த 2012

மற்றும் 2019 ஆண்டுகளில் மாநகரப் பகுதிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு

ஏற்படும்பொழுது, 

அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம் என்பதை தெரிவித்துக்

கொள்கிறோம். 


இதன்மூலம் நேரடியாகவும் 

மறைமுகமாகவும் சுமார் 5000 பேர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கிறது. 



மேலும்‌ இந்த தண்ணீர் விநியோகத்ததை போர்களுக்கு சீல் வைத்து தடை செய்வதால்

அனைத்து தரப்பு மக்களும் மற்றும் நிறுவனங்களின் அவசர தேவைக்கான

தண்ணீர் முற்றிலும் தடைபடும் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு

வருவதோடு மேலும் அரசாங்கத்தில் இருந்து முறையாக அனுமதி பெறவும்,

அதற்கு உண்டான கட்டணத் தொகையை செலுத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் 

அதற்கு உண்டான வழிமுறைகளை அரசிடம் இருந்துதெரிந்துகொண்டு அனுமதி பெற்று இந்த சேவையைத் தொடர 

இருக்கிறோம். 


நாங்கள் ஏற்கனவே போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுக்க

அனுமதி தொடர்பாக State Ground and Surfice Ground Water Department-ஐ

அணுகியும் எந்த முகாந்தரமும் இதுநாள்வரை வழங்கவில்லை. 


மேலும் நமது மாவட்டத்தில் லாரி மூலம் தண்ணீர் எடுப்பதற்கு யாருக்கும் NOC

வழங்கப்படவில்லை என வாய்மொழியாகக் கூறுகின்றார்கள்.

தீடீர் நடவடிக்கை !!!

கடந்த 11.09.2023ம் தேதியன்று தூத்துக்குடி  சார் ஆட்சியாளர்

வல்லநாடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆழ்துளைக்கிணறு

பகுதிக்கு சென்று SHOWCAUSE NOTICE அறிவிப்பு வழங்கி, தண்ணீர் எடுப்பதை

தடை செய்தும், மேலும் தண்ணீர் எடுக்கும்பட்சத்தில் தங்கள் மீது இ.த.ச. 379

பிரிவின்படி கிரிமினல் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று

கூறியுள்ளார்.

மேலும், 6 வீல் கொண்ட வாகனங்களில் மட்டுமே தண்ணீர் விநியோகம்

செய்ய அனுமதி உண்டு என்றும், 6 வீல்களுக்கு மேற்பட்ட வாகனங்களை 

இயக்கக்கூடாது என்றும், அவ்வாறு எடுத்தால் வாகனங்கள் பறிமுதல் உள்பட

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும்

தண்ணீரை பெரிய லாரிகள் மூலம் வெளியேற்றினால் அந்த லாரிகள் மீதும்

நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

எனவே, போர்வெல் இருந்து லாரி மூலம் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்வதற்கும் டாரஸ் லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்ய அனுமதி வழங்கி எங்கள் வாழ்வதாரத்தை

மீட்டுத்தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக