ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாநகர பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்


 தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

இது பற்றிய செய்தியாவது:-



       தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணி பாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு நேற்று (13-8-2023) ஆல்கன் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் மரக்கன்று நடுவது என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி 275 வது வாரம் முத்தம்மாள் காலணி ராம்நகர் பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.



     நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், தமிழக மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், மகேஸ்வரசிங், ஜெயராஜ், முருகன், விக்னேஷ், ஜெயபால், மாரி, செந்தில், முத்துராஜ், இசக்கிராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், திமுக வட்டச்செயலாளர் ரவிந்திரன், ஒய்வு பெற்ற அரசு ஊழியர் ராமமூர்த்தி, மற்றும் கணேசன், வேல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக