thoothukudi leaks 16-8-2023
த.சண்முகசுந்தரம்
மூத்த பத்திரிகையாளர்
மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான என்.பெரியசாமி கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டு பல வருடங்களாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புதியதாக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பத்திர பதிவு அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச தையல் பயிற்சி, கனிணி பயிற்சி மையத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
இந்த இலவச தையல் பயிற்சி வகுப்புக்கு அருணாதேவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு தையல் பயில வரும் மாணவிகள், பெண்களுக்கு பயிற்சி வழங்குகிறார்.
அதே போல் இலவச கனிணி பயிற்சி வகுப்புக்கு கவிதா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு கனிணி பயில வரும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பயிற்சி வழங்குகிறார்.
விழாவில் வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஆறுமுகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, ஜெயசீலி, வட்ட செயலாளர்கள் முனியசாமி, ராஜாமணி, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, ரேவதி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெரியசாமி கல்வி அறக்கட்டளை இயக்குநர் ஜீவன் ஜேக்கப் சிறப்பாக செய்திருந்தார். பின்னர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்: மறைந்த எனது தந்தையார் பெயரில் கல்வி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, பல்வேறு சமூக பணிகளும், பள்ளி, கல்லூரி சார்ந்த மாணவ-மாணவியர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெண்கள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற்றம் பெற அவர்களுக்கென சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இலவசமாக கனிணி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் அரசு பணித் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக குரூப்-1 தேர்வு பயிற்சி வழங்கும் வகையில் புதியதாக அகாடமி ஆரம்பிக்க உள்ளோம். இந்த பயிற்சி நிலையத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக