ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடியில் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து

thoothukudi leaks 14-8-2023

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர்


 தூத்துக்குடியில் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

      தூத்துக்குடி திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இதுபற்றி செய்தியாவது:-

 திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக பாலு, துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி உள்ளிட்ட உயர்மட்ட முக்கிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின் திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் முறையாக செயல்படுகின்றன. 

அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இளைஞரணி பொறுப்பை வழிநடத்தி 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 



திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் முதன்மை அணியாக செயல்படுவது இளைஞர் அணி தான். 


திமுக கட்சியின் கொள்கைகளை தீவிரமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பில் இளைஞர் அணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இது கடந்த காலத்தில் ஸ்டாலின் இருந்த காலம் தொட்டு இன்று வரை தொடர்கிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் வழக்கறிஞர் அணி பொறுப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவில் பணியாற்றியதையும், கழகம் அறிவித்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட விவரத்தையும் கேட்டறிந்து, குறிப்பாக அவர்களில் தீவிர களப்பணி ஆற்றுபவர்கள் யார் என்பதை கண்டறிந்தார். 


அதில் துடிப்புடன் செயல்படும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

       அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவராக நாகராஜன், துணைத்தலைவராக அழகர்சாமி, அமைப்பாளராக  குபேர் இளம்பரிதி, துணை அமைப்பாளராக விநாயகமூர்த்தி, வெயில்முத்து, மகேந்திரகுமார், விஜயபாலன், பிரபு, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை மாவட்ட அமைப்பாளர் குபேர் இளம்பரிதி மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஜேசுராஜா தயான், அந்தோணி செல்வதிலக், ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

     அப்போது அமைச்சர் கீதாஜீவன்  பேசியதாவது:-

தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வழக்கறிஞர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, மற்றும் கருணா, மணி, பாஸ்கர், அல்பட், உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக