திங்கள், 28 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல ஆய்வு கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

thoothukudileaks 29-8-2023

த.சண்முகசுந்தரம்


தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல ஆய்வு கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

     தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான கவுன்சிலர் சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் பழைய மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.



    அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் இந்த மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டு பகுதிகளிலும் மாசு இல்லாத வகையில் பொதுமக்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும். நெகிழிகளை உபயோகப்படுத்தக்கூடாது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அப்பகுதிக்குட்பட்ட சுகாதார மேற்பார்வையாளர்கள் எடுத்துக்கூறி நம் நகரம் நம் மக்கள் என்ற அடிப்படையில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். என்று கூற வேண்டும். 15 வார்டுக்குட்பட்ட எந்த பகுதிகளிலும் தேவையற்ற கழிவுகள் குப்பைகள் சாலைகளில் தெருக்களில் தேங்கி கிடக்காதவாறு பார்த்துக்கொண்டு பணிகளை முழுமையாக மனிதநேயத்தோடு செய்ய வேண்டும். உங்களுக்கு அப்பகுதியில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ஓத்துழைப்பார்கள் என்று பேசினார்.

   


 

ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, கிழக்கு மண்டல தலைவர் கலைசெல்வி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் எடின்டா, ரெக்சிலின், ஜான்சிராணி, மகேஸ்வரி, தனலட்சுமி, மெட்டில்டா, மரியகீதா, சரண்யா, ராமுஅம்மாள், மும்தாஜ், ரிக்டா, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜோஸ்பர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக