thoothukudileaks 29-8-2023
த.சண்முகசுந்தரம்
தூத்துக்குடி 36 வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி மாநகராட்சி 36வது வார்டுக்குட்பட்ட மக்கள் குறைகேட்டல் முகாம் நடைபெற்றது. கக்கன் பூங்கா அருகேயுள்ள சுப்பையா 2 மற்றும் 3வது குறுக்குத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை அமைச்சர் கீதாஜீவன் கேட்டறிந்தார்.
பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், இந்த பகுதிக்கு திமுக ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை கால்வாய், வசதிகள் அமைத்து தரப்படும் குடிதண்ணீர் சீரான முறையில் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் விஜயலட்சுமி, மாவட்;ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், அரசு வழக்கறிஞர் ஆனந்தகபரியேல்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளார் பிரபு, வட்டச்செயலாளர் செல்வராஜ், வட்டப்பிரதிநிதி துரை, மாவட்;ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், மகேஸ்வரசிங், மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியளார் துரைமணி, உள்பட அரசுதுறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக