thoothukudi leaks 12-8-2023
Photo news by arunan
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில்..
மதுரையில் 2023 ஆகஸ்ட் 20 ல நடைபெறும் அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது.
அதிமுக மாநாடு"செல்வது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இத பற்றிய செய்தியாவது -
மதுரையில் ஆகஸ்ட் 20 ல நடைபெறும்
அதிமுக கட்சி யின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
அதையொட்டி தமிழக முழுவதும் அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..
அதிமுக மதுரை மாநாடு மிக பிரமாண்டமாக அமைய வேண்டும் என பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் கள் மாவட்ட செயலாளர் களுக்கு உத்தரவிட்டார்.
இதனால் முன்னாள் அமைச்சர் கள் மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதியில் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனை குழு கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது..
பின்பு மாவட்ட அதிமுக அலுவலகம் கூட்டரங்கில் நடைபெற்றது
இன்று (12.08.2023) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி பாளை ரோடு, பானு பிருந்தாவன் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.
ஆகஸ்ட் 20 தேதி அதிமுக கட்சி தொண்டர்கள் அனைவரும் பெருவாரியாக அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் கார் மற்றும் வாகனங்களில் வருகிறவர்கள் தங்கள் விவரம் மாவட்ட அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எஸ் பி சண்முகநாதன் ஆலோசனை கூட்டத்தில் பேசினார் .
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகர பகுதி, பேரூராட்சி நிர்வாகிகள், அதிமுக அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் சார்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக