வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

போதையில்லாத மாநிலம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

thoothukudi leaks 11-8-2023

 .சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

போதையில்லாத மாநிலம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

இதுபற்றி செய்தியாவது -

தமிழக அரசின் சார்பில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தூத்துக்குடி மாவட்டம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஆயுதப்படை வளாகம் அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மேயர் ஜெகன் பெரியசாமி மாநாகராட்சி ஆணையர் தினேஷ் குமார் சப் - கலெக்டர் கௌரவ் குமார் ஒட்டினார்கள். 



முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணி காமராஜ் கல்லூரியைச் சென்றடைந்தது. விழாவில் மதுவிலக்கு டிஎஸ்பி சிவசுப்பு மற்றும் டிஎஸ்பிகள் . சத்தியராஜ் , கோடிலிங்கம், போக்குவரத்து காவல் ஆய்வாளர், மயிலேறும் பெருமாள், மாவட்ட உணவு வழங்கல்அலுவலர் அபுல் காசிம், போக்குவரத்து வட்டார அலுவலர் விநாயகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிரியர் மாரியம்மாள் தலைமை வகித்தார்.


மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவின்படி போதையில்லாத மாநிலத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நடைபெறுகிறது. நான் படித்த காலத்தில் சைக்கிளில் தான் சென்றேன். ஒரு கார் வைத்திருப்பவர்களைப் பார்த்தால் அது அதிசயமாக தெரியும். சைக்கிளில் செல்வதுதான் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்றுப்போல் இயங்கும் உடல் ஆரோக்கியத்திற்கு உடற் பயிற்சி அவசியம். அந்த காலத்தில் இப்போது இருப்பதுபோல் விஞ்ஞானத் தொழில் நுட்பம் கிடையாது. 


எல்லாவற்றிலும் நாங்கள் கேட்டுத்தான் தெரிந்து கொள்வோம். அதேபோல் உங்களின் திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் உங்களது வயது எந்த வித கவலையின்றி இருக்கும் நிலையில் இருப்பீர்கள். 


ஆனால் எதிர்காலத்தில் நாட்டிற்காக பணி செய்பவர்களாகவும் வீட்டைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்பீர்கள்.

படிக்கும் காலத்தில் உங்களது தாய் தந்தையர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சிரமத்திற்கு இடையில் உங்களை படிக்க வைத்திருப்பார்கள். இந்த சாலையில் செல்லும்போது கூட அதில் சிறிய பள்ளம் இருந்தால் அதில் நான்கு தேவையற்ற கற்களை நிரப்பினால் அதுவும் ஒருபொது சேவை தான். நம்மால் நான்கு பேர் பலன் அடைந்தால் நன்மை. என்பதை கருத்தில் கொண்டு படிக்கும் பருவத்தில் தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் இந்த நாட்டிற்கு பெருமையை சேர்க்கும் வகையில் உருவாக வேண்டும். தான் படித்த பள்ளியின் பெருமையையும் பெற்றோர்களின் அருமையையும் உணர வேண்டும். 

நான் இந்த பொறுப்பிற்கு....வருவதற்கு முன்பு காரில் செல்லும் போது தேவையற்ற பொருளை சாலையில் போடுவதுண்டு. தற்போது அதை செய்வதில்லை. எனக்கு இந்த பொறுப்புணர்ச்சி இருப்பதைப் போல் உங்களுக்கும் இருக்க வேண்டும். 

தூத்துக்குடி மாநாகராட்சி பகுதியில் சுமார் ஆயிரம் பேரை வைத்து தூய்மை பணியில் ஈடுபடுகிறோம். தினமும் 150டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றனர். 


அதை தருவைக் குளத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமாக 550ஏக்கர் இடத்தில் மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. 


பல ஏக்கர் நிலத்தில் பல்வேறு செடிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கல்வியின் தரத்தை நாம் முழுமையாக அறிந்து கொண்டு படிப்பது போல் தேவையற்ற எந்த செயலையும் ஈடுபடக் கூடாது. என்ற அறிவுரையை கூறி பேசிய பின் பள்ளி மாணவர்கள் மேயர் உறுதிமொழியை கூற பின்னர் அதை தொடர்ந்து கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. 


விழாவில் கவுன்சிலர் பாப்பாத்தி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநாகராட்சியில் நடைபெற்ற உறுதிமொழி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ் குமார் முன்னிலையில்,

போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன், 

மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளாதனவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவழக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


 துணை ஆணையர் ராஜாராம், மாநகராட்சி ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், அரசு அலுவலர்கள் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக