தூத்துக்குடி லீக்ஸ் 28-7-2023
செய்தி புகைப்படங்கள்:-
த.சண்முகசுந்தரம்
மூத்த பத்திரிகையாளர்
தூத்துக்குடியில் பள்ளி பருவத்தை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சைக்கிள் வழங்கி மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.
மாணவிகள் உடன் அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்ஏவி பள்ளி, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் பயிலும் 427 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழக மக்களின் எதிர்காலத்தையும் எதிர்கால தலைவர்களாக உருவாகவுள்ள மாணவிகளுக்கு நல்ல முறையில் தரமான கல்வி வழங்கி அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.
அந்த வழியில் ஒன்று முதல் நான்கு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்து என்ற படிப்பு, அதனைத் தொடர்ந்து பல்வேறு படிப்புக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்கள் படிப்புக்கு பின்பு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது எதற்கு என்றால் பல நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யும் போது நம்முடைய மாணவ மாணவிகளுக்கு திறன்மேம்பாடு குறைவாகவுள்ளது என்பதால் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவி தான் நானும் என்று சொல்லிகொள்வதில் மகிழ்ச்சி அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்
நமது பெற்றோர்களை போல் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும். இந்த படிப்பு காலம் தான் முக்கியமான காலம் இதை கடந்து விட்டால் திரும்பவும் இதுபோன்ற மாணவ பருவம் வராது. இதை நல்லமுறையில் படிக்கின்ற காலத்தை விரையம் செய்யாமல் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்து தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு உங்களது திறமையை வளர்த்து கொண்டால் வெற்றி அடைய முடியும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை சமாளித்து சாதனையாக்கி வீர நடைபோட வேண்டும் இந்த பள்ளியில் நான் படித்தேன். என்று சொல்லிக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். என்று பேசினார்.
எஸ்.ஏ.வி பள்ளி தலைமை ஆசிரியர் கிருபை வேல்முருகன், உதவி தலைமை ஆசிரியர் ஞானதுரை, பள்ளியின் செயலாளர் வக்கீல் சொர்ணலதா, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி சைமன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா பரிபூரணம், தாளாளர் ராஜாசிங், கவுன்சிலர் ராமுத்தம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, மீனாட்சி சுந்தரம், மற்றும் மணி, அல்பட், உள்பட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக