வியாழன், 27 ஜூலை, 2023

பாராட்டு மழையில் கவுன்சிலர்கள் மேயர் ஜெகன் பெரியசாமி புளகாங்கிதம் விரைவில் ஸ்மார்ட் சிட்டி பஸ்ஸாடாண்ட் திறக்க போவதாக தெரிவிப்பு!!!

தூத்துக்குடி லீக்ஸ் 28-7-2023

செய்தி த.சண்முகசுந்தரம்

புகைப்படங்கள் அருணன்


தூத்துக்குடி மாமன்றம் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி யை சிறப்பாக மாதா கோவில் விழா மாநகராட்சி பணி செய்திருந்தாக பாராட்டு ✋ கைதட்டி உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்.

 தன் கடமையை செய்ததாக தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி புளகாங்கிதம் அடைந்தார்.



இது பற்றிய செய்தியாவது:-

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி 

பனிமய மாதா பேராலய திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன. பேராலய பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 9 இடங்களில் குடிநீர் தொட்டி, 150 தூய்மை பணியாளர்கள், நகரும் கழிப்பறை வசதி, அந்த பகுதியில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக பரமாரிக்க கூடுதல் பணியாளர்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.


தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    கவுன்சிலர் ரெக்சிலின் பேசுகையில் எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டு குடிநீர் சீரான முறையில் வழங்கி வரும் மேயருக்கும் ஆணையருக்கும் வார்டு பகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும் தூத்துக்குடி பனிமய மாதா கோவில் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக இறங்கி மாநகராட்சி சார்பில் அப் பகுதியில் திருவிழா விற்கு வரும் பக்தர்களுக்கு செய்துள்ள தெரிவித்ததும் தூத்துக்குடி கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு தெரிவித்தனர்.

    அதிமுக எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி பேசுகையில்  தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கேட்டுக் கொண்டார்.

அதிமுக கவுன்சிலர் மந்திர மூர்த்தி 


      இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. 


மாநகராட்சி பணிகளுக்கு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைக்க வேண்டும். . இந்திய உணவுக் கழகத்தில் இருந்து வண்டுகள் வெளியேறி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த காலத்தில் முறையாக செயல்படாமல் இருந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தற்போது முழுமையாக நிறைவேற்றும் பணியை செய்து வருகிறோம். என்றார்.

கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ஜாக்குலின்ஜெயா, ஜான்சிராணி, வைதேகி, கனகராஜ், ஜெபஸ்டின் சுதா, ஜெயசீலி, ரெங்கசாமி, சரவணக்குமார், இசக்கிராஜா, பட்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சோமசுந்தரி, தெய்வேந்திரன், மாநகராட்சி இணை ஆணையர் ராஜாராம், பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், திட்டம் ராமசந்திரன், ரெங்கநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, ஸ்டாலின், ராஜசேகர், ஹரிகணேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 தூத்துக்குடி மாநகராட்சி வரி மேல் முறையிட்டுக் குழு உறுப்பினர்கள்

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 

    தூத்துக்குடி மாநகராட்சி வரி மேல் முறையிட்டுக் குழு உறுப்பினர்கள் தேர்வு நடந்தது. 

அதில் கவுன்சிலர்கள் இசக்கிராஜா, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், தெய்வேந்திரன், நாகேஸ்வரி, ஜாக்குலின் ஜெயா, மகேஸ்வரி, சுயம்பு, சீனிவாசன், ரெக்சிலின் ஆகியோர் மாநகராட்சி வரிமேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை ரூ.25.57 கோடியில் சீரமைப்பது தொடர்பாக நான்கு தீர்மானங்கள் உள்ளிட்ட முக்கிய 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக