தூத்துக்குடி லீக்ஸ் 24-7-2023
த.சண்மூகசுந்தரம்
மூத்த பத்திரிகையாளர்
தூத்துக்குடியில் வடக்கு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட ..
திமுக மாநில அமைப்பு செயலாளர் வக்கீல் ஆர் எஸ் பாரதி .
2024ல் மோடியின் ஆட்சியை வீழ்த்தியே தீரவேண்டும்
திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான் இருக்கின்றனர்.என தெரிவித்தார்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து வடக்கு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் 12 வாசல் மையவாடி முன்புள்ள மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார்.
மாநில மகளிரணி பிரச்சார குழுச்செயலாளர் ஜெஸி பொன்ராணி, வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாரதா, வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலெட்சுமி, தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில திமுக அமைப்புச் செயலாளர் வக்கீல் ஆர் எஸ். பாரதி துவக்கி வைத்து பேசியதாவது....
திமுக கட்சியின் பெருமையை மோடிக்கு இரண்டே நாளில் புரிய வைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 90 நாட்களாக மணிப்பூரில் நடக்கும் சம்பவம் கொடுமை எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருந்தவர் மோடி ஒவ்வொரு தாண்டவத்தையும் பார்க்கும் போது கொடூரமாக உள்ளது.
அங்குள்ள மலைஜாதி மக்கள் குக்கி சமுதாயம் உரிமைகளை கேட்டு போராடிய பெண்களை கொடூமை படுத்தி கேவலமாக நிர்வாணத்துடன் தம்பி தந்தை கணவர் முன் கற்பழித்துள்ளனர்.
இதை கண்டுக்கொள்ளாத மோடிக்கு தமிழகத்தில் உள்ள திமுக போராட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான் இருக்கின்றனர். குஜராத்தில் ஓரு இஸ்ஸாமிய கர்ப்பினி பெண்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்தனர்.
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இட்ட கட்டளையை ஏற்று டெல்லி செங்கோட்டை வரை இந்த தாய்மார்கள் குரல் ஒலிக்கின்றன.
இந்த தொகுதியின் எம்.பி டெல்லி பாராளுமன்றத்திற்கு செல்ல இருப்பதால் நேற்றைய தினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கனிமொழி கலந்து கொண்டார்.
2024ல் நடைபெறவுள்ள தேர்தலின் போது மோடி ஆட்சியை ஒழித்தே தீர வேண்டும். என்று அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும் என்று பேசினார்.
மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களும் பதாகைகளுடன் இரண்டாயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு தலைவர்கள் தூத்துக்குடி வசுமதி அம்பாசங்கர், கோவில்பட்டி கஸ்தூரி, கருங்குளம் கோமதி, வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் தங்கம், துணைத்தலைவர் மகாலட்சுமி, துணை அமைப்பாளர்கள் பெருமாள் அம்மாள், எப்சினா மேரி, விஜயலட்சுமி, பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் கோகிலா, அங்காளஈஸ்வரி, தூத்துக்குடி மாநகர மகளிர் அணி தலைவர் ஜான்சிராணி, துணைத்தலைவர் பாப்பாத்தி, அமைப்பாளர் ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் நாராயணவடிவு, கலாவதி, ரெஜினா, விஜயலட்சுமி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர் பவாணி மார்ஷல், வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் தமிழ்செல்வி, ஜெயந்தி, மலையரசி, கஸ்தூரி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் கருமாரியம்மாள், இந்துமதி, தூத்துக்குடி மாநகர தலைவர் சோபனாவாஸ், துணை தலைவர் ராஜேஸ்வரி, அமைப்பாளர் கவுன்சிலர் ஜெயசீலி, துணை அமைப்பாளர்கள் மரியகீதா, பெல்லா, கவுன்சிலர் சுப்புலட்சுமி, டோலி, கவுன்சிலர் வைதேகி, தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, சரண்யா, தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சோமசுந்தரி, துணைத்தலைவர் தமிழரசி, துணை அமைப்பாளர்கள் விஜிபுனிதா, விஜிலா, லின்சி, மரிய பொன்னம்மாள், ரேவதி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் மீனாட்சி, நித்யா, மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவர் வேலம்மாள், துணைத்தலைவர் பெப்பின்ராகன், துணை அமைப்பாளர்கள் தயாநிதி, வசந்தி முருகன், பிரதீபா, செண்பகவல்லி, முத்துலட்சுமி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் சுஜிப்ரீதி ஜாய், அன்னசெல்வி, கவுன்சிலர்கள் பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், இசக்கிராஜா, சரவணக்குமார், மற்றும் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், கோட்டுராஜா, இராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியகழன், ரமேஷ், சீனிவாசன், அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, அந்தோணிகண்ணன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவிந்திரன், சுரேஷ்குமார், மேகநாதன், மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் செல்வின், கிறிஸ்டோபர் விஜயராஜ், பிக்அப்தனபால் பால்ராஜ், ரவி, தொமுச நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், கருப்பசாமி, இலக்கிய அணி சக்திவேல், நலம் ராஜேந்திரன், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, முத்துராஜா, பத்மாவதி, பொன்ராஜ், நிர்வாகிகள் சந்தனமாரி, ஜெயராணி, ரேவதி, சுரேஷ்குமார், கருணா, மணி, அல்பட், தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அருணாச்சலம், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் அம்பாசங்கர், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, இலக்கிய அணி அமைப்பாளர் துறைமுகம் ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், சுப்பிரமணியன், பகுதி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜனகர், புன்னக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கணேசன், ரெங்கசாமி, ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், மாநில பேச்சாளர் வக்கீல் சூர்யா வெற்றிக்கொண்டான், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்;சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, மற்றும் காமராஜ், ரத்தினகுமார், மகாராஜா, வக்கீல் கிருபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக