thoothukudi leaks 21-7-2023
photos sunmugasunthram
news arunan
தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
அதில் ஏழை எளியவர்களுக்கு குறைந்த விலையில் நல்ல தரமான உணவு தயார் செய்து வழங்கப்பட்டு வரும் நிலையில் சில பகுதிகளில்
பொதுமக்கள் எண்ணிக்கை அதிக அளவில் வருவதால் விரைவாக உணவு வகைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றன
மேலும் உணவில் தலைமுடி..கிடப்பதும்அதில் பணிபுரியும் பெண்கள் சுகாதாரமின்றி அழுக்கடைந்த கையுடன் உணவு எடுத்து தருவதும் பணிக்கு வந்து காணாமல் போவதும் ஆட்கள் இன்றி ஒருவர் இருவர் மட்டுமே இருப்பதும் வருபவர்கள் இடம் மரியாதை குறைவாக நடந்தும்நவருவதாக தெரிய வருகிறது உணவகங்களில் ஊழியர்களுக்கு பதில் வேறு நபர்கள் அங்கே இருப்பதும் தொடர்கிறது இப்படி பல்வேறு குற்றச்சாட்டு
இந்நிலையில்....
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டு அங்குபணிபுரியும் ஊழியர்களிடம் தினமும் தயார் செய்யப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்து தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி
அங்குள்ள பணியாளர்களிடம் கூறுகையில் இந்த அம்மா உணவகம் ஏழை எளியவர்கள் அதிக அளவில் வந்து செல்லக் கூடிய பகுதியாகும்.
அதிலும் மருத்துவமணைக்கு வருகின்ற பலர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் நல்ல உணவு கிடைக்கும் வகையில் தட்டுபாடின்றி வழங்குவதற்கு கூடுதலாக தயார் செய்து வழங்க வேண்டும். எல்லோருக்கும் பணியாற்றும் வகையில் உங்கள் செயல்கள் இருக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார். உதவி செயற்பொறியாளர் சரவணன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர் உள்பட பலர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக