புதன், 26 ஜூலை, 2023

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்பு

 ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்பு 




இது பற்றிய செய்தியாவது:-

இந்திய தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்குறியாக்கும் ஜனநாயகத்துக்கு விரோதமான 

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் ஒன்றிய பாசிச பாஜக மோடி அரசை கண்டித்தும்


மணிப்பூரில் பழங்குடி மற்றும் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை அங்குள்ள

 மாநில பாஜக அரசும், ஒன்றிய மோடி அரசும் 


ஈவு இரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயல்களை, அக்கிரமங்களை, அநியாயங்களை

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பாஜக அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக தூத்துக்குடியில் 

23 / 07/ 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 

அகமது இக்பால் மாவட்ட செயலாளர் மத்திய மாவட்டம் தூத்துக்குடி

கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் 

விடுதலைப் சிறுத்தை கட்சி

மத்திய மாவட்டம்

வணிகர்அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், 

கிளை பொறுப்பாளர் நூர்முகமது 

மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இவண் 

அகமது இக்பால் மாவட்ட செயலாளர் மத்திய மாவட்டம் தூத்துக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக