செவ்வாய், 2 மே, 2023

திமுக அரசு 12 மணி நேர சட்ட மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது தமிழகத்தை காப்பாற்ற எடப்பாடியை விட்டால் வேறு யாரும் இல்லை அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பரபரப்பு பேச்சு.

 thoothukudileaks 3-5-2023

photo news by shanmuga sunthram 

தமிழகத்தை காப்பாற்ற எடப்பாடியை விட்டால் வேறு யாரும் இல்லை

எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சரும் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக எச்சரித்த பின்னரே திமுக அரசு 12 மணி நேர சட்ட மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 

ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பரபரப்பு .....




இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி தொழிலாளர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மேதின விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மேதின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

      அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில் இந்த அதிமுக இயக்கத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கும் அதை ரானுவ கட்டுப்பாட்டில் வழிநடத்திய ஜெயலலிதாவிற்கும் இன்று வரை மறைந்தும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார்கள். இவர்களது காலத்திற்கு பின்பு 3ம் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உருவாகியுள்ளார்.


 அவரது ஆட்சிகாலத்தில் மக்களுக்கான திட்டங்கள் நடைபெற்றன. 


ஆனால் இப்போ நடைபெறும் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குடும்பமும் தமிழகத்தை சுருட்டி கொண்டிருக்கிறது


இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று எடப்பாடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

     மேதின விழாவின் நோக்கமே உலகம் முழுவதும் ஒரு தொழிலாளி தனது பணி நேரத்தை 8 மணி நேரமாக இருக்க வேண்டும் என போராடி பெற்றதின் காரணமாக இந்த மே தினம். உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்ட 8 மணி நேர பணி சட்டத்தை தமிழகத்தில் திமுக ஸ்டாலின் அரசு 12 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக  இதற்கான 12 மணி நேர பணி மசோதாவையும் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். 


இச்செயல் மிகப்பெரிய தொழிலாளர் விரோத செயலாகும். உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட 8 மணி நேர பணியை தமிழக அரசு மட்டும் மாற்றுவது தான் திராவிட மாடல் அரசா? என கேள்வி எழுப்பினார்.


 எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சரும் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக எச்சரித்த பின்னரே திமுக அரசு 12 மணி நேர சட்ட மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 


எந்த காலத்திலும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருப்பது அதிமுக கட்சி மட்டும் தான் இதை எல்லோரும் அறிவார்கள் தமிழகத்தை காப்பாற்ற எடப்பாடியை விட்டால் வேறு யாரும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக