திங்கள், 1 மே, 2023

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரை கிராம சபை கூட்டத்தில்..கனிமொழி எம்பி கலெக்டர் செந்தில் ராஜ் ஆகியோர் பாராட்டு

 thoothukudileaks 1-5-2023

photo news by shanmuga sunthram 

மாப்பிள்ளையூரணி பகுதி மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் 

உங்களது ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் மாப்பிள்ளையூரணி வளர்ச்சிக்கு என்னை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைப்பார் என‌ இன்று 1-5-2023 நடந்த கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி பாராட்டு 



இது பற்றிய செய்தியாவது:-

       தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுபடி மேதினத்தை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் ராம்தாஸ்நகர் தனியார் மஹாலில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

      கூட்டத்தில் மகளிர் கூட்டமைப்பு தலைவர் சமூக ஆர்வலர் என பல்வேறு தரப்பை சார்ந்த ஆண் பெண் என பலர் அப்பகுதியில் குடிதண்ணீர் சாலை வசதி பாலம் பேருந்துநிலையம் நிழற்குடை பட்டா ஆக்கிரமிப்பு மீட்பு காவலர் குடியிருப்பு மின்கட்டண தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.



   பின்னர்  கனிமொழி எம்.பி பேசியதாவது:-

கிராமங்களில் உள்ளவர்களை அதிகமாக சென்று சந்திக்க வேண்டும். என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


 திமுகவிற்கு இதுபுதியது அல்ல. எம்பி தேர்தலுக்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடத்தியுள்ளோம் 

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் மனுக்களை பெற்றுள்ளோம் அந்த மனுக்கள் மீது தமிழகம் முழுவதும் தீர்வ கண்டதில் தூத்துக்குடி மாவட்ட முதலிடம் பெற்றுள்ளது. 

அவ்வளவு விரைவாக கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். 



உங்களது ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் மாப்பிள்ளையூரணி வளர்ச்சிக்கு என்னை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைப்பார், 

 சென்ற பின் சந்திக்கும் போது வணக்கம் சொல்லிவிட்டு கடந்த செல்லமாட்டார். 


அந்த கோரிக்கை என்னவாயிற்று அதை விரைவில் முடித்து தாருங்கள் என்பார்.

 அது மட்டுமின்றி அமைச்சர் கலெக்டர் எம்.எல்ஏவிடம் தொடர்ந்து கோரிக்கை வைப்பார் இந்த பகுதி வளர்ச்சிக்கு உழைக்க கூடியவர்

 

அவர் உங்களுக்கு கிடைத்தது போன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்த தொகுதி எம்.எல்.ஏ சண்முகையா ஆகியோரும் இந்த பகுதி நலன் கருதி பணியாற்றுபவர்கள் நீங்கள் வைத்துள்ள கோரிக்கை அனைத்தையும் ஒருங்கிணைய இணைந்து ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களிடம் அதிகாரிகளிடம் எடுத்துச்சொல்லி நிறைவேற்றுவோம். 


அதில் ஒன்றின்கீழ் ஒன்றாக எந்த பணிகளுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செய்து தருவோம். அமைச்சர் அனிதாவை பொருத்தவரை யார் எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களிடம் தொலை பேசியில் பேசி அந்த பணிகளை முடித்துக்கொடுப்பார்.


 ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளுக்கு மரியாதை தருபவர் இந்த பகுதி நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்.


 குடிதண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு மூன்றரை கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதே போல் 12 கோடி மதிப்பீல் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 17 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிதண்ணீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது. அதேபோல் பயணிகள்; பேருந்து நிழற்குடை கேட்டீர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி கட்டி தருவதாக உறுதியளித்துள்ளார்.


 கதர்கிராமத்துறைக்கு உள்ள இடத்தில் விளையாட்டு மைதான் பூங்கா அமைக்க வேண்டும் என்று கூறிய கருத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகளிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் இன்னும் ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் ...


இந்த ஊராட்;சிக்கு முதல்வரின் தங்கை வந்துள்ளதால் உங்களுக்கு உள்ள குறைகள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படுகின்ற பொற்காலமாக அமைந்துள்ளது. 


அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கனிமொழிக்கு வரும் காலங்களில் அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.


கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில் ...

ஏற்கனவே கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துக்கொண்டார். நான்கூட இந்த தொகுதியில் வேறு பகுதிக்கு செல்வோம் என்று சொன்னேன். ஆனால் நமது எம்.பி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தான் செல்ல வேண்டும் என்று சரவணக்குமார் மீது உள்ள நம்பிக்கை காரணமாக தேர்ந்தெடுத்து வந்துள்ளார்கள்.

 இதன்மூலம் இங்கு பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள குறைகளை தீர்ப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசு சிறப்பு நிதியை பெற்று செய்து தருவார்கள் என்றார்

.



சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் ...

வருடத்திற்கு நான்கு முறை என்று இருந்த கிராமசபை கூட்டம் முதலமைச்சர் உத்தரவுபடி 6 முறை நடைபெறுகிறது. மக்கள் நலன்தான் முக்கியம் என்று செயல்படும் நாங்கள் அனைத்து குறைகளையும் குறிப்பெடுத்துள்ளோம். அதைமுறையாக அதிகாரிகளிடம் தெரிவித்து செய்து தருவோம் என்றார்.


     கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, பயிற்சி கலெக்டர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சப்கலெக்டர் கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உலகநாதன், ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, ஊராட்சி அலுவலர் சரஸ்வதி, சமூகநலத்துறை அலுவலர் ரதிதேவி, சுகாதார பணிகள் துணைச்செயலாளர் பொற்செல்வன், கால்நடைபாரமரிப்பு துறை மண்டல இணைச்செயலாளர் சஞ்சீவிராஜ், நோய் புலாணாய்வு பிரிவு இணை இயக்குநர் சங்கரநாராயணன், வேளாண்மை துறை உதவி இயக்குநர் சந்திரகலா, வேளாண்மை இணை இயக்குநர் பழனிவேலாயுதம்,  உதவி அலுவலர் மீனாட்சி உதவி தொழில் நுட்ப மேலாளர் முத்துகிருஷ்ணன், வேளாண்மைதுறை உதவி செயற்பொறியாளர் ஜெகவீரபாண்டியன், இளநிலை பொறியாளர் முத்துராஜ், தோட்டகலை உதவி இயக்குநர் சபினா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கந்தையா, பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, ஹெலன் பொண்மணி, உதவி அலுவலர் மகேஸ்வரி, தாசில்தார் செல்வக்குமார், மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் அபுல்கசன், சுகாதார ஆய்வாளர்கள் வில்சன், முக்கம்மது ஆசிக் அரபி, பிரதீப்குமார், வட்டார சுகாதார அலுவலர் ஆறுமுகநியளை, மாவட்ட நலக்கல்வியாளர் அந்தோணிச்சாமி, தமிழ்நாடு குடிநீர்வடிகால்வாரிய கண்காணிப்பு பொறியாளர் செந்தூர்பாண்டி, உதவி நிர்வாக பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் மகேஷ்குமார், கிராமநிர்வாக அலுவலர் அமலதாசன், மின்சாரவாரிய அலுவலர்கள் பூலுடையார், வாசு, ரெங்கத்துரை, கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், துணைத்தலைவர் சிவக்குமார், கூட்டுறவு பிரபாகர், பெருமாள், சந்தனராஜ், பியூலா, கலா, திலகராஜ், தங்கம், மகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், மகாலட்சுமி கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சண்முகப்பிரியா, தூய்மை பாரத இயக்க திட்ட அங்காள பரமேஸ்வரி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டியன், சக்திவேல், ராணி, வசந்தகுமாரி, பாண்டியம்மாள், ஸ்டாலின், உமா மகேஸ்வரி, தங்கமாரிமுத்து, ஜேசுராஜ், பெலிக்ஸ், மாநில திமுக வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுசசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், நிர்வாகிகள் பொன்னுச்சாமி, முருகன், மகாராஜா, உள்பட கிளைகழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 



கோரிக்கை மனு கொடுத்த அனைவரிடமும் கனிமொழி எம்.பி நேரில் மனுக்களை பெற்றுக் கொண்டார். மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் வளர்ச்சி குறித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக