thoothukudileaks 4-4-2023
photo news by shanmuga sunthram
உங்கள் குறைகள் கோரிக்கைகளை என்னிடமோ மேயரிடமோ தெரியப்படுத்துங்கள் தூத்துக்குடி திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்தார்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாநகர திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசிய தாவது:-
50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் தூத்துக்குடி தொகுதியில் சேர்க்க வேண்டும் அதற்கு அனைவரும் தங்களது பகுதியில் வீடு வீடாக சென்று தினமும் 1மணி நேரமாவது கட்சிக்கு உழைக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர்களை சேர்க்கலாம்.
திமுக ஆட்சி வந்த பின்பு முதல்வர் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் முன் வைக்கின்றனர்.
செய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் என்னிடமோ அல்லது மேயரிடமோ தெரியப்படுத்துங்கள்.
குட்டையை குழப்பி மீன்பிடிக்க பலர் நினைக்கின்றனர்.
அது ஒருபோதும் நடக்காது.
திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் மக்களுக்கு கிடைக்கின்றன.
ஜாதி மதம் கிடையாது சட்டமன்றத்தில் கவர்னர் தெரிவித்த கருத்துக்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து நம்முடைய உரிமையை முதலமைச்சர் பாதுகாத்தார்.
மற்ற கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
கொள்கை உணர்வோடு நாம் இருக்க வேண்டும். கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஜுன் 3ம் தேதிக்குள் நமது மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்துகொடுக்க வேண்டும்.
பூத் கமிட்டியை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதில் இளைஞர்கள் பெண்கள் இடம் பெற வேண்டும்.
வட்டச்செயலாளர்கள் வட்டப்பிரதிநிதிகள் தான் அந்த பகுதியில் திமுக வளர்ச்சிக்கு துணையாக இருந்து செயல்படக்கூடியவர்கள்.
ஜெயலலிதா இருந்தவரை திராவிட ஆட்சிக்கு எந்த இடையூறும் வரவில்லை.
எடப்பாடி அடிமையாக இருந்ததால் ஒன்றிய அரசால் பல ஆபத்துக்கள் வந்தன.
திமுகவில் 23 அணிகள் உள்ளன. அதற்கு தகுந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து தரவேண்டும். அதை முறையாக தலைமை கழகம் அறிவிக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில்....
தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைசெயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான் அலெக்ஸாண்டர், மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அபிராமிநாதன், அன்பழகன், கஸ்தூரிதங்கம், மோகன் தாஸ் சாமுவேல், ஜெபசிங், பிரதீப், பிரபு, ஜேசையா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், சேர்மபாண்டி, சக்திவேல், செந்தில்குமார், மாநகர அணி நிர்வாகிகள் ஆனந்தகபரியேல்ராஜ், அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜாக்குலின் ஜெயா, பவாணி மார்ஷல், ஜெயசீலி, நாகேஸ்வரி, ஜான், இசக்கிராஜா, பொன்னப்பன், முத்துவேல், விஜயகுமார், சுப்புலட்சுமி, வைதேகி, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, பொன்ராஜ், செல்வராஜ், சதிஷ்குமார், சேகர், கருப்பசாமி, கதிரேசன், சுரேஷ், வன்னிராஜ், சக்திவேல், அண்டோ, டென்சிங், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், மற்றும் கருணா, அல்பட், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை வழங்கினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக