திங்கள், 10 ஏப்ரல், 2023

அதிமுகவிற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் கபாடி போட்டி விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு

thoothukudileaks 11-4-2023

photo news by shanmuga sunthram 

   தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குட்டிராஜா இளையநிலா நியூ பிரண்ட்ஸ் நடத்தும் மாபெரும் மின்னொளி கபாடி போட்டி துப்பாஸ்பட்டி ஞானப்பிரகாசியர் திடலில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் கடந்த இரு தினங்கள் நடைபெற்றது.



     கபாடி போட்டியை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசியதாவது:-

 மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், 1972ல் அதிமுகவை துவக்கிய முதல் தேர்தலிலேயே வெற்றிக் கொடி நாட்டி அவர் மறையும் வரை முதலமைச்சராக பணியாற்றிய காலத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு நன்மைகளை செய்ததின் மூலம் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். 


அவர் வழியில் ஜெயலலிதா கட்சியை தலைமையேற்று ரானுவ கட்டுபாட்டுடன் வழிநடத்தி முதலமைச்சராக அவர் மறையும் வரை பணியாற்றி என்னற்ற திட்டங்களை மக்களுக்காக வாரி வழங்கினார். 

3வது தலைமுறையாக முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தி செல்கிறார்.



 மக்கள் நலன் தான் முக்கியம் என்று வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் கொள்கைகளை தாங்கி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்காக பணியாற்றி வருகிறார். 

எதிர்வரும் காலங்களில் அதிமுகவிற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் உங்களுக்காக எந்த உதவி என்றாலும் என்னை எப்போதும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 உங்களுக்காக உழைக்க நாங்கள் உள்ளோம். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று பேசினார். 


பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுதொகையும் வழங்கப்பட்டது.

       விழாவில் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், வட்ட செயலாளர்கள் ராஜா, துரைசிங், அரசு போக்குவரத்து கழக மண்டல இணை செயலாளர் சங்கர், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், வட்ட பிரதிநிதி மணிகண்டன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஊர்க்காவலன், ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை மாரியப்பன், மாடசாமி, பேச்சிராஜா, தங்கமாரியப்பன், மருதபெருமாள், அருள்தாஸ், முருகன், சந்தனகுமார், சுந்தர்ராஜன், சியோன் அசோக்குமார், மாரியப்பன், ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக