சனி, 15 ஏப்ரல், 2023

டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் பங்கேற்ற..நட்டாத்தியில் சாரோன் பள்ளி ஆண்டு விழா

thoothukudileaks 16-4-2023

photo news by showban 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் நட்டாத்தியில் சாரோன் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது 

பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.



இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி சாரோன் மெட்ரிக் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா சுப்பிரமணியபுரம் எஸ்விபிஎஸ் மண்டபத்தில் வைத்து  நடைபெற்றது.



 ஆண்டு விழா நிகழ்வை வலசைக்காரன் விளை அருட்சகோதரர் டாக்டர் ஜெபராஜ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். விழாவிற்கு பள்ளித்தாளாளர் அலெக்ஸ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சீலா வசந்தி முன்னிலை வகித்தார். 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவரும் மருத்துவருமான டாக்டர் எஸ். புவனேஸ்வரி சண்முகநாதன் சிறப்புரையாற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். 



இந்நிகழ்வில் வாழவள்ளான் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர்  பாக்கியசீலி அருண், ஸ்ரீவைகுண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன், சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், ஏரல் வட்ட சமூக நல அலுவலர் சீதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி நிர்வாகத்தினர் நன்றி கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக