🤷🏻♀️ தூத்துக்குடி லீக்ஸ் 26-4-2023
அருணன் செய்தியாளர்
தூத்துக்குடி கடல்பகுதியில்.. குழந்தை களுடன் குஷியாக கனிமொழி எம்பி படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தார்.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ..தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் படகு போக்குவரத்து சேவை, பம்பர் போர்ட் ரைடு, சர்ஃபிங், ஸ்டாண்ட் அப் போட், பனானா ரைடு உள்ளிட்ட கடல்சார் விளையாட்டுக்களை....
இன்று 26-4-2023 துவக்கி வைத்தார் கனிமொழி கருணாநிதி எம்.பி
அப்போது கடலில் குழந்தை களுடன் மகிழ்ச்சி யாக கனிமொழி எம்பி படகில் ஏறி ரவுண்ட் போய் வந்தார்.
குழந்தை களுடன்... குஷியான கனிமொழி எம்பிபின்னர் ...
கனிமொழி எம்பி அவரை சுற்றியவாறு குழந்தை கள் அவருடன் பேசி மகிழ்ச்சி புகைப்படங்கள் எடுத்து கொண்டார்கள்.
தூத்துக்குடி கால்டுவெல் மேல் நிலை பள்ளி எதிராக அமைந்துள்ள முத்துநகர் கடற்கரையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கடல்சார் விளையாட்டுகளை துவக்கி வைத்தனர்.
அப்போது கனிமொழி எம்.பி அவருடன் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் குழந்தைகள் படகில் சவாரி செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி பொதுமக்களுக்கு... தூத்துக்குடி கால்டுவெல் மேல் நிலை பள்ளி எதிராக அமைந்துள்ள முத்துநகர் கடற்கரை பகுதி சென்னை மெரீனா கடற்கரை பகுதி போல் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மகிழ்ந்திட சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக