புதன், 26 ஏப்ரல், 2023

தூத்துக்குடி மாநகராட்சி 23வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் மக்கள் குறை கேட்பு

thoothukudileaks 26-4-2023

photo news by shanmuga sunthram


தூத்துக்குடி மாநகராட்சி 23வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் பொதுமக்களிடம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார். 



பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க சுட்டி காட்டிய குறைகளை நேரில் கண்டறிந்தார்.


 அதனை நிறைவேற்றும் வகையில் முத்துகிருஷ்ணாபுரம் 2வது தெரு பகுதியில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

  மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி,  மகேஸ்வரி, வட்டச் செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மற்றும் மணி அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக