thoothukudileaks 18-4-2023
photo news by shanmuga sunthram
பிரதமர் மோடி க்கு முன்று கேள்வி எழுதி இரண்டாம் ஆயிரம் தபால் அட்டைகள் தபால் பெட்டியில் போட்டு தூத்துக்குடி காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் கண்டன போராட்டம் பரபரப்பு
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்
முன்று கேள்வி
1
பிரதமர் நரேந்திர மோடிக்கு அதானி இது வரை பாஜகவுக்கு எத்தனை கோடி நிதி கொடுத்துள்ளார்?
2
உங்களின் அதிகாரபூர்வ வெளிநாட்டு பயணங்களை தொடர்ந்து அதானி எத்தனை ஒப்பந்தங்களை வென்றார்?
3
உங்கள் சிறந்த நண்பர் உலகில் 609வது இடத்தில் இருந்து 6 ஆண்டுகளில் 2வது பணக்காரராக வருவதற்குகான மந்திரத்தை எங்களுக்கும் கூறுங்கள்?
இந்த 3 கேள்விகளை தபால் கார்டில் அச்சிட்டு பிரதமர் மோடி அவருக்கு முதற்கட்டமாக 2 ஆயிரம் கார்டு அனுப்பும் போராட்டம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் திரளான காங்கிரசார் தலைமை தபால் அலுவலகத்தில் மத்திய அரசுக்கும், அதானி குழும்பத்திற்க்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி அஞ்சல் பெட்டியில் போட்டனர்.
தொடர்ந்து
காங்கிரசார் தபால் கார்டுகளை பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு வழங்கி அவர்களும் ஆர்வத்தோடு பெற்று கையேழுத்திட்டு அஞ்சல் பெட்டியில் அனுப்பினர்.
இந்த போராட்டத்தில் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல்,மேற்கு, தெற்கு மண்டல தலைவர்கள் ராஜன் செந்தூர்பாண்டி,மாவட்ட துணை தலைவர்கள் C.D.விஜயராஜ்,A.D.பிரபாகரன், அருணாசலம்,தனபால்ராஜ் மாவட்ட பொது செயலாளர் சின்னகாளை,செயலாளர்கள் கோபால்,காமாட்சிதனபால்,ஆரோக்கியம், வெங்கடசுப்பிரமணியம்உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக