thoothukudileaks 6-4-2023
photo news by shanmuga sunthram
தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் இடம் மனு கொடுத்த ஒரு மணி நேரத்தில் மாற்றுதிறானாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார் .
அமைச்சர் கீதா ஜீவனின் அதிவேக செயலை பார்த்து இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார் மாற்றுத்திறனாளி !!!
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்று வருகிறார்.
தூத்துக்குடி ராஜமன்னார் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார்.
மனு வழங்கிய அவரை அங்கேயே அமர வைத்து ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் ஜெயசீலி, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, டென்சிங், செந்தில்குமார், முன்னாள் வட்டச்செயலாளர் மாரியப்பன், மற்றும் அற்புதராஜ், மணி, அல்பட், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறியவதாவது:-
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குறைகேட்பு மனு அமைச்சர் கீதா ஜீவன் பெற்றுவருவதாக சொன்னார்கள்.
கோரிக்கை வைத்தால் நிறைவேற்றி தருவார்கள் என்று பலரும் கூறியதின் பேரில் மனு அளித்தேன்.
என்னை இங்கே அமரவைத்து ஒரு மணிநேரத்தில் சைக்கிள் வழங்கியதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
பெண் சிங்கம் !!!
தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் அவர் கூட மாவட்டத்தின் நிலவரங்களையும் கண்டறிந்து பேசியபோது பெண்சிங்கம் என்று கீதாஜீவன் அவங்களை மூன்று முறை பாராட்டி பேசினார் .
அதற்கேற்றாற்போல் அமைச்சர் கீதாஜீவன் பணிகள் செய்கிறார்கள்
என்னை போன்ற ஏழை எளியவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த தமிழக முதலமைச்சருக்கும் அமைச்சர் கீதாஜீவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக