வியாழன், 9 மார்ச், 2023

தூத்துக்குடியில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

 thoothukudileaks 9-3-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடியில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடியில் இந்தியன் கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு, வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கனரக வாகன ஓட்டுநர்களுக்காக இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் தூத்துக்குடி துறைமுகம் ஆணையம், பாஸ் வழங்கும் இடம் லாரி நிறுத்த முனையத்தில் வைத்து நடைபெற்றது.



இதில் இந்தியன் கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவன டாக்டர் முத்துக்குமார், தேசிய நிகழ்ச்சி பொறுப்பாளர் சரவணன், மாநில தலைவர் வரதராஜ், மாவட்ட தலைவர் ஜான்சன், மாவட்ட துணைத் தலைவர் கண்ணன், வ.உ.சி துறைமுக பொறுப்பு கழக சார்பில் முதுநிலை துணை மேலாளர் ரமேஷ், துணை போக்குவரத்து மேலாளர் சுரேஷ், தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவர் மகேஸ்வரி தலைமையிலான குழுவுடன் இணைந்து சுமார் 300க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனருக்கு இலவச கண் பரிசோதனை நடத்தி இலவச கண் கண்ணாடி வழங்கி முகாம் சிறப்பாக நடத்தினார்.



இதில் சிறப்பு சேர்க்கும் முகமாக கனரக வாகன பெண் ஓட்டுநர்கள் ஜெயலட்சுமி மற்றும் சகாயமேரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக