வெள்ளி, 10 மார்ச், 2023

இரண்டு வருடமாக சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை முட வில்லை தமிழர் விடியல் கட்சி குற்றச்சாட்டு

 thoothukudileaks 10-3-2023

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இரண்டு வருடமாக சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை முட வில்லை இதனால் விபத்து ஏற்பட்டு இரண்டு உயிர்கள் பலியாக்கப்பட்டு இருக்கிறார்கள் .

தமிழர் விடியல் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் கள்.

இதுபற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரம் காவல் சரகத்திற்குட்ப்பட்ட ஸ்பிக்நகர் பகுதியில் கடந்த இரண்டு வருடமாக சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.

இந்த பள்ளம் உருவாக காரணம் சாலை விரிவாக்கத்திற்கு முன்பு சாலையின் ஓரமாக தண்ணீர் குழாய் பூமிக்கடியில் பதிக்கப்பட்டது .

அதற்கு பிறகு சாலை விரிவாக்கம் நடைபெற்றதால் தண்ணீர் குழாய் பதிக்கப்பட்ட இடம் சாலையின் நடுவில் உருவாக காரணமாக அமைந்துவிட்டது .



இதன் காரணமாக கனரக வாகனங்கள் முதற்கொண்டு ஆயிரக்கணக்கான நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்ககூடிய சாலையாக மாறிவிட்டது மட்டுமல்ல தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.


[

இந்த சாலையின் சற்று தொலைவில் மேற்கு புறத்தில் கீதா ஜீவன் அமைச்சர் அவர்களுடைய பள்ளிக்கூடமும் , கிழக்கு புறத்தில் ஸ்பிக் நகர் தொழிற்பயிற்சி கூடமும் அமைந்துள்ளது . இதில் சுமார் இரண்டாயிரம் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள் . இவர்களும் இந்த பள்ளம் இருக்கிற சாலை வழியாகத்தான் மாணவ மாணவிகள் காலையும் மாலையும் சென்று வருகிறார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது . ]


இதனால் சாலையின் நடுவில் பூமிக்கடியில் சுமார் பத்து அடிக்கு கீழே உள்ள தண்ணீர் குழாய் சேதமடைந்தாக தெரிய வருகிறது .

சேதமடைந்தை தண்ணீர் குழாயில் இருந்து அதிக அளவு தண்ணீர் பீறீட்டு வெளியே வருவதால் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.

வீீடியோபார்க்க  

இந்த பள்ளத்தை மூட வேண்டுமானால் முறையாக தண்ணீர் குழாயினுடைய அடைப்பை சரி செய்ய வேண்டும் .

ஆனால் அதை செய்யாமல் சம்பந்தப்பட்ட துறை ரீதியான அதிகாரிகள் உப்புக்கு சப்பாக கற்களையும் மணலையும் கொண்டு வந்து பள்ளத்தில் தட்டிவிட்டு செல்கின்றார்கள்.


அதனால் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் வெளியே வராமல் இருக்கிறது .

அதற்கு பிறகு பழைய குருடி கதவ தெறடி என்ற பழமொழிக்கேற்ப  மீண்டும் குழாயில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியே வருகிறது .

இதில் கவனிக்ககூடிய விஷயம் என்னவென்றால் கற்களையும் மணலையும் தட்டியவுடன் அதில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருக்கும் பேரி கார்டை எடுத்து விடுகிறார்கள் ..


ஏதோ பெரிய வேலையை செய்தது போல அதிகாரிகள் சென்றுவிடுகிறார்கள்.


மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது . இந்த பள்ளத்தை வாகனத்தில் வருகிறவர்கள் சரியாக கவனிக்க முடியாமல் போய்விடுகிறது.

இதனால் விபத்து ஏற்பட்டு இரண்டு உயிர்கள் பலியாக்கப்பட்டு இருக்கிறார்கள் .


இதற்கு யார் காரணம் ..

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காரணம்.


இதை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியும் வண்ணமாக கவன ஈர்ப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது,


இனியும் சரிசெய்ய மறுத்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மக்களை திரட்டி மாபெரும் சாலை மறியல் செய்யக்கூடும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறெம்.


சேமா.சந்தனராஜ்

தமிழர் விடியல் கட்சி

தூத்துக்குடி மாவட்டம் 

இவ்வாறு தெரிவித்துள்ளார் கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக