ஞாயிறு, 12 மார்ச், 2023

அண்ணா மலை நாளை உண்ணாமலை ? அதிமுக எம்.எல்.ஏ ஆவேசம் அதிமுகவை மிரட்டி சீண்டி பார்த்தால் உன் பருப்பு வேகாது எம்எல்ஏ சவால் ?

 thoothukudileaks 12-3-2023

photo news by shanmuga sunthram 

அண்ணாமலை ஐபிஎஸ் ஐஏஎஸ் எதுவும் படித்திருக்கட்டும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 

அதிமுகவை மிரட்டி சீண்டி பார்த்தால் பருப்பு வேகாது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ் எம்.எல்.ஏ எச்சரிக்கை

இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டி விலக்கு பகுதியில் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.



    இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ பேசியதாவது:-

 சேலை கட்டிய சிங்கமாக இருந்தவர் ஜெயலலிதா 16 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவரை போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும். 

என்பதற்கு இலக்கணமாக வீடு தோறும் ஜெயலலிதாவின் திட்டங்கள் சென்றடைந்தன 


2011 தேர்தலின் போது வெற்றி பெற்று பொறுப்பேற்றதும்...முதல் கையெழுத்தாக 20 கிலோ அரிசி இலவசம் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். 


அது இன்று வரை எல்லோருக்கும் பலன் உள்ளதாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பும் அவரது புகழை யாரும் அழிக்க முடியாது.


 3ம் தலைமுறையாக இபிஎஸ் வலம் வருகிறார். விரைவில் பொதுச்செயலாளராக தேர்வு செய்ய இருப்பது காலத்தின் கட்டாயம் எடப்பாடி ஆட்சியில் மீன் பிடி தடைகாலத்தில் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 


அதே போல் உப்பள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் கூறியிருந்தார். 


ஆட்சி மாற்றத்தால் நடக்க வில்லை. ஒட்டப்பிடாரம் தொகுதி மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். அதிலும் மாப்பிள்ளையூரணியில் 40 பூத்துக்கள் உள்ளன .


நீங்கள் மனது வைத்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். 


அரசின் இட ஒதுக்கீடு 7.5 சதவீத திட்டம் எடப்பாடி கொண்டு வந்ததின் மூலம் கிராமப்புறத்தில் உள்ளவர்களும் மருத்துவர்களாக வாய்ப்பு கிடைத்தது. 


அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி  எடப்பாடி பழனிசாமி கிளைச்செயலாளராக பணியாற்றி பல பொறுப்புக்கு வந்தபின் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். 


அதே போல் நானும் 1500 வாக்கு உள்ள ஊரில் பூத் ஏஜென்டாக கிளைச்செயலாளராக பணியாற்றி ஜெயலலிதா மாவட்ட பொறுப்பு வழங்கி அமைச்சராக்கி அழகு பார்த்தார். 


குழந்தை பெற்ற பெண்களுக்கு பரிசு பெட்டகம், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், கொண்டு வந்ததினால் அன்னை தெரசா ஜெயலலிதாவை நேரில் வாழ்த்தினார். 

ஜெயலலிதா புகழை மறைக்கவும் முடியாது மக்கள் மறக்கவும் மாட்டார்கள். 



அதிமுகவை யாராலும் உரசி பார்க்க முடியாது இது திராவிட பூமி, என்பதை அண்ணாமலை உணர வேண்டும். 


தேர்தலில் வெற்றி தோல்வி வருவது சகஜம் ஈரோடு தோல்வி எங்களுக்கு ஒர் எச்சரிக்கை வெற்றி பெற்றிருந்தால் மெத்தனம் வந்திருக்கும் எம்.பி தேர்தல் ஒர் மைல் கல் வாகைக்குளம் விமான நிலையத்திற்கு சுமார் 670 ஏக்கர் இடம் நான் அமைச்சராக இருக்கும் போது அதிமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


இரண்டு ஆண்டுகாலமாக முழுமையான பணிகள் முடியாமல் இருந்து வருகின்றன. 


முடிவு பெற்றிருந்தால் திருச்சி மதுரையை போல் இரவு நேர விமானமும் வந்து செல்லும் நிலை வந்திருக்கும். பிஜேபி அதிமுக கூட்டணிதான் ஆனால் கருத்து வேறுபாடு முரன்பாடுகள் உண்டு இனி வரும் காலங்களில் கூட்டணி உண்டா இல்லையா என்பதை தலைமை தான் முடிவு செய்யும். டெல்லியில் சந்திரசேகரை பிரதமராக்கிய போது எங்கள் பங்கு இருந்தது. 


அதே போல் வாஜ்பாயை பிரதமராக்கி பிஜேபியை முதலில் அமர வைத்தது நாங்கள் தான். 


இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரியுமா, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்...!!!


 அதிமுக கட்சி உருவாகி 52 வருடமாகிறது. எம்.ஜி,ஆர் ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் வழிநடத்துகிறார். தமிழகத்தில் உள்ள எம்.பிக்களில் 39ல் போட்டியிட்டு 37ல் வெற்றி பெற்ற கட்சி அதிமுக. அதே போல் 2016ல் கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தலை சந்தித்தோம்.


 அண்ணாமலை ஐபிஎஸ் ஐஏஎஸ் எதுவும் படித்திருக்கட்டும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவை மிரட்டி சீண்டி பார்த்தால் உன்னுடைய பருப்பு வேகாது அதன் விளைவை சந்திக்க நேரிடும். என்று எச்சரிக்கிறோம். எம்.ஜி,ஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு நிகராக யாரும் கிடையாது. 


ஆனால் வாய்க்கு வந்தப்படி அவருக்கு நிகர் இவர் இவருக்கு நிகர் அவர் என்று பேசுவதற்கு உனக்கு அருகதை கிடையாது. இன்று நீ அண்ணாமலையாக இருக்கலாம்....


நாளை இங்கு மற்றொரு உண்ணாமலையும் வரலாம். உங்கள் அதிகாரம் டெல்லியில் தான் உள்ளது. 


கோவில்பட்டியில் எடப்பாடியாரின் படத்தை நான்கு பேர் எரித்தனர் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம் தலைமையின் உத்தரவு படி நாங்கள் இருக்கிறாம் மேல் நடவடிக்கை மேற்கொள்ளாமல். உன்னுடைய (அண்ணாமலை) நடத்தை சரியில்லாததால் பலர் வெளியேறி அதிமுகவில் இணைகிறார்கள்.


 கால மாற்றத்திற்கேற்ப அரசியலில் நடைபெறுவது இயல்பானது தான் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், போன்றவர்கள் பிஜேபியில் இனைந்த போது நாங்கள் ஏதாவது சொன்னோமா இல்லையே???



 தேசிய கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை அண்ணாமலையின் அரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் அதிமுக அடிபணியாது. 


தூத்துக்குடியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 


இனி வரும் தேர்தல்களில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று பேசினார்.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய  செயலாளர் ஆர்.ஜவஹர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல், லட்சுமண பெருமாள், செங்கான்,  பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், சிறுபான்மைபிரிவு செயலாளர் ஜாக்சன் துரைமணி. மாவட்ட துணை செயலாளர் பேச்சியம்மாள், ஜெ பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கௌதம் பாண்டியன், மாணவரணி செயலாளர் முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓன்றிய அவைத்தலைவர் சுடலை வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மோகன், சின்னப்பன், அமைப்பு செயலாளர் சீனிவாசன், தலைமை பேச்சாளர்கள் கிருபாகரன், அப்பாத்துரை, உள்ளிட்ட பலர் பேசினார்கள். பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் கிளைச்செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாப்பிள்ளையூரணி ஊராட்சி தகவல் தொழில்நுட்ப செயலாளர் பிரதீப் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக