சனி, 18 மார்ச், 2023

அமைச்சர் கீதாஜீவன் வீதி வீதியாக சென்று தூத்துக்குடியில் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 தூத்துக்குடி லீக்ஸ் 19-03-2023

போட்டோ &செய்தி சண்முகசுந்தரம் 

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீதி வீதியாக  சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


  

 இது பற்றிய செய்தியாவது -

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ வும் அமைச்சருமான கீதா ஜீவன்  மக்கள் குறை கேட்பு க்காக தூத்துக்குடியில்  வீதிவிதியாக சுற்றி மக்களை சந்தித்து வருகின்றார்.

மூன்றாவது நாளாக மாநகராட்;சி 28வது வார்டுக்குட்பட்ட இரண்டாம் கேட் பகுதியில்....

  அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.  

கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.


 அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

     இரண்டாம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் முதியவர் 3 சக்கர சைக்கிள் கேட்டு மனு அளித்தார். மற்றொருவர் அப்பகுதியில் சில தெருக்களில் குண்டும் குழியுமாக இருப்பதாக கூறி மனு அளித்த பின் அதனால் ஏற்பட்ட சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டதும் சிலர் காயம் அடைந்ததையும் வீடியோவாகவும் படமாகவும் தனது செல்போனில் எடுத்து வைத்திருந்ததை அமைச்சரிடம் காண்பித்தனர். 


அமைச்சர் கீதாஜீவன் பார்த்தார். பின்னர் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வந்து பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுகொண்டதிற்கிணங்க அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை கொளுத்தும் வெயிலில் நடந்தே சென்று பார்வையிட்டு ராஜமன்னார் தெருவில் பாதிப்புக்குள்ளான பகுதியில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் உங்களுக்கு பணி செய்வதற்குதான் என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் இந்த வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.



 நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, அரசு வழக்கறிஞர் சுபேந்திரன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார்,  கவுன்சிலர் ராமுத்தம்மாள், வட்ட செயலாளர் அந்தோணிலாசர், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் குருசாமி, மீனாட்சி சுந்தரம், வட்ட பிரதிநிதி பாஸ்கர், மற்றும் சிவா, மாரியப்பன், அல்பட், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக