வெள்ளி, 31 மார்ச், 2023

பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சி

 thoothukudileaks 31-3-2023

photo news by soban 

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி   ஆண்டு விழா கலை நிகழ்ச்சி பெருங்குளம் பேரூராட்சி திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பளராக பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் கலந்து கொண்டார். 



 பெருங்குளம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்ராணி  வரவேற்புரை ஆற்றினார். 


போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு  டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் பரிசு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏரல் காவல் நிலை ஆய்வாளர் மேரி  ஜெமிதா   பெருங்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முகத்தாய், கண்ணம்மா, செ முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக