ஞாயிறு, 26 மார்ச், 2023

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் சா்வதேச மகளிா் விழா

 thoothukudileaks 27-3-2023

photo news by tamilan Ravi 

தூத்துக்குடி  முத்துநகா் கடற்கரையில்  சா்வதேச மகளிா் விழா நடைபெற்றது.




இதுபற்றி செய்தியாவது:-  

                          தூத்துக்குடியில்  26.03.2023. ஞாயிறு மாலையில்  முத்துநகர் கடற்கரை மைதானத்தில் தூத்துக்குடி  உதவும் கரங்கள் அரக்கட்டளை மற்றும் டுவின்ட ஹார்ட் எவென்ட் பிளானர் குழுவினர் இணைந்து சர்வதேச பெண்கள் தின விழிப்புணர்வு 2023 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

 இந்நிகழ்ச்சியில்...

 ஜி செலின் ஜார்ஜ்  மத்திய நிர்வாகி சகி ஒன் ஸ்டாப் சென்ட்டர் தூத்துக்குடி  எஸ் செல்வ லக்ஷ்மி, அக்குரா ஹெர்பல் சானிட்டரி நாப்கின் நிறுவனர் சிவகாசிஎ ஸ் சந்தோஷினி  பொது அறுவை சிகிச்சை நிபுணர்  தூத்துக்குடி  சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் 


 அத்துடன் தூத்துக்குடி  உதவும் கரங்கள் அரக்கட்டளை நிறுவனர்,  துணை நிறுவனர் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.  

கடற்கரை மைதானத்தில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடை பயணம் 


தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை மைதானத்தில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடை பயணம் சென்றனர். 

பின்னர் டுவின்ட ஹார்ட் எவென்ட் பிளானர் நிறுவனத்தின்  நிறுவனர் செல்வி அபிநயா வரவேற்புரை வழங்கினார்,

பின்னர் சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கும் விதமாக பொண் ஆடை மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. 


பின்னர் சிறப்பு விருந்தினர்கள் பெண் விழிப்புணர்வு, குழந்தைகள் விழிப்புணர்வு குறித்து விளக்கினர். 


மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தூத்துக்குடி பகுதியில் சாதனை படைத்த ஐந்து பெண்கள் துறை வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவித்து பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கினார்.



 பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில் நிறைவில் தூத்துக்குடி உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் சங்கரபாகம்  நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக