புதன், 1 மார்ச், 2023

தூத்துக்குடி அன்னை இந்திரா நகர் பகுதி 3-வது வார்டு கழக செயலாளர் சிவகுமார் தலைமையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

 தமிழக முதல்வர் ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று பட்டாசு வெடித்து கேக் மற்றும் லட்டு வழங்கியும் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கியும் திமுக வினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

 


தூத்துக்குடியில் திமுக தெற்கு மாவட்ட த்தில் தூத்துக்குடி அன்னை இந்திரா நகர்  பகுதி 3-வது வார்டு கழக செயலாளர் சிவகுமார் தலைமையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.



இதுபற்றிய செய்தியாவது -

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி இன்று 1-3-2023 காலை 11.மணி அளவில் 

தூத்துக்குடி அன்னை இந்திரா நகர் பகுதி 3-வது வார்டு கழக செயலாளர் சிவகுமார்  தலைமையில் முதல்வர் ஸ்டாலின் பெயரில் வடிவமைப்பு செய்த பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

பிரமாண்டமான கேக்

பிறந்த நாள் பேனர் 


அப்பகுதியில் பொதுமக்களுக்கு கேக் மற்றும் இனிப்பு லட்டு வழங்கினர் . முன்னதாக முதல்வர் ஸ்டாலின் பேனர் முன்பு அப்பகுதியில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்

இந்நிகழ்ச்சியில் அன்னை இந்திரா நகர் 3-வது வார்டு கழக செயலாளர் சிவகுமார் மற்றும் தேவேந்திரன், கார்த்திகேயன் , ரெங்கராஜன் செல்வராஜ், தர்மராஜ், பத்மநாபன், உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக