வியாழன், 2 மார்ச், 2023

நெக்ஸ்ட் பிரதமர் மு.க.ஸ்டாலின் ? அரசியல் பரபரப்பு

thoothukudileaks 2-3-2023

அடுத்த பிரதமர் மு.க.ஸ்டாலின்..தான் ஆக வேண்டும்..



தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இது பற்றிய செய்தியாவது:-

இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


ஸ்டாலின் பிரதமரானால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய பரூக் அப்துல்லா, தமிழக முதல்வரை தேசிய அரசியலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

இது குறித்து ... பேசிய வீடியோ பார்க்க !!!

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களிலும், 2006 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

video 

பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். யார் தலைமை ஏற்பார்கள், யார் பிரதமர் என்று நான் கூறவில்லை. அது கேள்வியல்ல, ஒற்றுமையாகப் போராட விரும்புகிறோம். இதுவே எங்கள் விருப்பம்’- என்று கார்கே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக