ஞாயிறு, 22 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் சலவை தொழிலாளர் களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதிமுக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது அதை தகர்த்து தெறிவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பொதுகூட்டத்தில் ஆவேசம்

thoothukudileaks 22-1-2023

Photo news by Roja arunan 

தூத்துக்குடியில் சலவை தொழிலாளர் களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதிமுக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது அதை தகர்த்து தெறிவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.



இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா எதிரே அமைந்துள்ள எம்ஜிஆர் திடலில் மறைந்த முன்னாள் முதல்வர்  டாக்டர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று ( 22-1-2023) தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை 6.30 நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ் பி சண்முகநாதன் பேசியதாவது:- 

தூத்துக்குடியில் சலவை தொழிலாளர் களுக்கு கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் ஆகியோரால் அநீதி இழைக்கப்பட்டால் அதிமுக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது அதை தகர்த்து தெறிவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பேசினார்.

தூத்துக்குடியில் சலவைதொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் இது ஆகவே உரிய முறையில் செயல்படுத்த வேண்டும் கமிஷன் பணத்தை பெற்றுக்கொண்டு சலவை தொழிலாளர்களுக்கு கிடைக்காமல் செய்ய கூடாது 

தூத்துக்குடியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் எல்லா திட்டமும் அதிமுக ஆட்சியில் கொண்டு வர பட்டதே அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு இருக்கிறீர்கள் இந்த ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைதான் நடக்கிறது.


அதிமுக ஆதரவு தெரிவித்து விட்டார்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற போகிறது ஸ்டாலின் ஆட்சி கலைகிறது 2024 ல் அதிமுகவை தான் மக்கள் வெற்றி 

அடைய செய்வார்கள் தலைவர் எடப்பாடியார் முதல்வர் ஆக வருவார் இந்த விடியலுக்கு ஒரு முடிவு கட்ட தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

 ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக  உறுதியாக வெற்றி பெறும் என்றார்.

video 


பின்பு பொதுமக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இன்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக