புதன், 11 ஜனவரி, 2023

தூத்துக்குடி ஊராட்;சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

 thoothukudileaks 11-1-2023

photo news by shanmuga Sundaram 

தூத்துக்குடி ஊராட்;சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடைபெற்றது.


தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் ஒன்றிய மன்ற கூட்டம் சமத்துவ பொங்கல் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஆஸ்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



     கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள பூப்பாண்டியாபுரம் டி.சவேரியார்புரம், மாப்பிள்ளையூரணி ஓம்சக்தி நகர் புதிய முனியசாமிபுரம் ஜோதிபாஸ்நகர், ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பணிகளை துரிதப் படுத்த வேண்டும் உறுப்பினர்கள் பகுதியில் நடைபெறுகின்ற தகவல்களை முறையாக உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணிதனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஆகியோர் பேசினர்.


 வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ், பொறியாளர் தளவாய், ஆகியோர் முறைப்படுத்தி துரிதமான பணிகளை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் பிள்ளையார்கோவில் ஜாஹீர்உசேன்நகர். சமீர்வியாஸ்நகா, பூபாண்டியாபுரம், பாலதாண்டாயுதநகர், ராஜபாளையம், உள்ளிட்ட பல பகுதிகளில் தார்சாலை பேவர்பிளாக் அமைத்தல் அடிபம்பு அமைத்தல் மற்றும் தளவாய்புரம் குமாரகிரி கூட்டுடன்காடு அள்ளிக்குளம், கோரம்பள்ளம், அய்யன்டைப்பு, மறவன்மடம் சேர்வைகாரன்மடம் குலையன்கரிசல், உள்ளிட்ட 38 பகுதிகளில் புதிய பணிகள் மேற்கொள்ளுதல் அதில் 15வது நிதிக்குழு மாணியம் 2022 2023ம் ஆண்டு இரண்டாம் தவணை நிபந்தணையற்ற பணிகள் திம்மராஜாபுரம் மேலதட்டப்பாறை கீழ தட்டப்பாறை முடிவைதானேந்தல் குமாரகிரி மாப்பிள்ளையூரணி குலையன்கரிசல் கூட்டுடன் காடு முள்ளக்காடு மற்றும் முதல் தவணை நிபந்தனையற்ற பணிகள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கீதாஜீவன் நகர் பைப் லைன் அமைத்தல் உள்ளிட்ட 12 பணிகள் மேற்கொள்வது மற்றும் இதில் அலுவலக உதவியாளராக இருந்து  உடல்நலகுறைவால் மறைந்த ஜெபராஜ்சாலமோனுக்கு ஒருநிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


 மொத்தம் 42 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், தொம்மைசேவியர், ஆனந்தி, முத்துமாலை, அந்தோணிதனுஷ்பாலன், ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துக்குமார், முத்துலட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆபிரகாம் தனசிங், பொறியாளர் தளவாய், மேற்பார்வையாளர்கள் முத்துராமன் சுப்பிரமணியன், யூனியன் மேலாளர் பாலமுருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்வை தொடங்கி வைத்து வஉசி சிலைக்கு வசுமதி அம்பாசங்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக