thoothukudileaks 11-1-2023
அரசு போக்குவரத்து கழகத்தில்..கடந்த 2009, 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பணிநியமனம் பெற்றதால் கடந்த காலத்தில் 2015 ஆம் ஆண்டு பதவி உயர்வில் முறைகேடு ஏற்படுத்தி ( சீனியாரிட்டி List) பதவி உயர்வு கொடுக்காமல் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள்.
இதுபற்றிய செய்தியாவது:-
அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி. நாகர்கோவில் மண்டலத்தில் 2009, 2010 ஆம் ஆண்டுகளில் உதவி பொறியாளர்களாக பணியில் சேர்ந்தோர் . சுமார் 13 வருடங்களாக பதவி உயர்வு ஏதும் இன்றி ஒரே நிலையில் உதவி மேலாளர்கள் பணிபுரிய வேண்டி இடங்களான கிளை மேலாளர் பதவியில் கிளை மேலாளர் (பொறுப்பு) ஆக சுமார் 7 வருடமாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த உதவி பொறியாளர்கள் அனைவரும் 2009, 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பணிநியமனம் பெற்றதால் கடந்த காலத்தில் 2015 ஆம் ஆண்டு பதவி உயர்வில் முறைகேடு ஏற்படுத்தி ( சீனியாரிட்டி List) பதவி உயர்வு கொடுக்காமல் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த முறைகேடு குறித்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரித்து உதவி பொறியாளர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தாலும், மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது போக்குவரத்துக் கழகம்.
தவறு இழைத்தவர்களை தண்டிக்காமல் விருப்ப ஒய்வு கொடுத்து இரு ஆண்டுக்கு முன்பே அனுப்பி பாதுகாக்கவும் செய்துள்ளனர்.
இவர்களுக்கு பின் பணியில் சேர்ந்த பிற கழக உதவி பொறியாளர்களுக்கு உதவி மேலாளராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் , உதவி மேலாளர் பதவியில் இருந்து துணை மேலாளர் & பொது மேலாளர் பதவி உயர்வுகள் தமிழ்நாடு அளவில் சீனியாரிட்டி படி கொடுக்கப்படும் நிலை வரும் போது நாகர்கோவில் மண்டல உதவி பொறியாளர்கள் மீண்டும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த உதவி பொறியாளர்களின் வாழ்வை பாழாக்குவது எந்த விதத்தில் நியாயம் ?
இதற்கு தமிழ்நாடு அரசு முதல்வர் அவர்கள் தலையிட்டு பாதிக்கப்பட்ட உதவி பொறியாளர்களின் வாழ்வில் வழிகாட்டிட வேண்டும்.
முதல்வரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி தவிக்கும் உதவி பொறியாளர்கள்🙏

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக