மறைந்த தமிழக முதல்வர் பாரத்ரத்னா புரட்சித்தலைவர் MGR 35ஆம் ஆண்டு நினைவு தினம் தூத்துக்குடி மாநகரத்தில் இன்று அதிமுகவினர் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது :-
தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட ம்சார்பாக தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில். இன்று(24-12-2022) காலை 10..30 மணி அளவில் பெருந்திரளான அதிமுகவினர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் மாவட்ட கழக அலுவலகம் முன்பிருந்து நினைவு நாள் மௌன அஞ்சலி ஊர்வலம் கிளம்பியது.
தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக வளாகம் வரை சென்று அங்கு அமைந்துள்ள MGR அவரின் திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அதிமுக சார்பு அணி மகளிர் அணி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கருப்பு சட்டையுடன் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக