செவ்வாய், 20 டிசம்பர், 2022

தமிழக முதல்வருக்கு புகார் மனு தூத்துக்குடியில் ஆயிரம் விவசாயி கள் உடன் திரண்ட மதிமுக துரை வைகோ தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் 20-12-2022

‌newsby :- Arunan

தூத்துக்குடியில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ  இன்று  20 12 2022 மாலை 4 மணி அளவில் விவசாயிகள்பிரச்சனைக்காக ஆயிரம் விவசாயிகளோடு மாவட்ட ஆட்சித் தலைவர்  சந்தித்து மனு கொடுத்தார் மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கும் எம்பி கனிமொழி எம்பி க்கும் அனுப்பி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஊர் வலமாக வந்த மதிமுக துரை வைகோ 


இதுபற்றிய செய்தியாவது:-

தமிழகத்தில்  பொறுப்பேற்றுக் கொண்ட தி.மு.க தலைமையிலான தமிழக அரசு விவசாயிகள் மற்றும் விவசாயப் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப் பன்றியின் தாக்கம் குறித்து ஆராய, வனத்துறைக்குள் ஒரு குழுவை அமைத்திருப்பதாக தெரிகிறது. 

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எனது, கவனத்திற்கு கொண்டு வந்தார்கள், அவர்களின் பிரச்சினையை தங்களின் மேலான் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இப்பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தூத்துக்குடி கலெக்டர் இடம் மனு கொடுக்கும் துரை வைகோ 


இப்பிரச்சினை தொடர்பாக முன்வைக்க விரும்புவது, விவசாயிகளுக்கும், விவசாயப் பயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை அழிக்க கேரள அரசைப் போல உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும். கிராமக் குழுக்களை ஏற்படுத்தி குறைந்தபட்சம் அதன் மூலமாக நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்க வேண்டும்.

வீீடியோ 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளை நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சமீபகாலமாக, அந்த பாதிப்பின் வீரியம் அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே, காலநிலை மாற்றம், உரம் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், காட்டுப் பன்றிகளால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ  தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட கனிமொழி எம்பி நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் இன்று 20-12-2022 மாலை4மணியவில்  ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் வந்து மதிமுக துரை வைகோ கலெக்டர் செந்தில் ராஜ் இடம் மனு கொடுத்தார்.

மதிமுக துரை வைகோ உடன் திரண்டு வந்த விவசாயி கள்


மதிமுக துணை பொது செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், புதுக்கோட்டை செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விநாயக ரமேஷ், மாநகர செயலாளர் முருகபூபதி, மதிமுக நிர்வாகிகள் சுந்தர்ராஜ், தராசு மகாராஜன், நக்கீரன் பேச்சிராஜ், தாயகம் செல்வராஜ், செல்லப்பா, பொன்ராஜ் உள்பட திரளான விவசாயிகள் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.

இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது .






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக