இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னனி தலைவரும் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் மூ.வீரபாண்டியன் மீது நேற்று (4.05.22) மாலை கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தோழர் வீரபாண்டியன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கண்டித்து இன்று 05.09.22 திங்கள் மாலை 6 00 மணியளவில் தூத்துக்குடி போல்டன் புரம் CPI மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழ உறுப்பினர் ஞானசேகர் முன்னிலை வகித்தார். அலுவலக செயலாளர் மாடசாமி பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் முனியசாமி, அந்தோணி சவுந்திரராஜன், பிரபாகரன் உப்பு சங்க செயலாளர் பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக