செவ்வாய், 31 மே, 2022

சென்னை யில் முதல்வர் பதக்கம் பெற்ற குற்ற பிரிவு குற்ற புலனாய்வு துறை (CBCID) காவல் ஆய்வாளர் சாந்தி இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்

தூத்துக்குடி லீக்ஸ் 31-05-2022

2021ம் ஆண்டிற்கான காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் வழங்கும் விழா கடந்த 27.05.2022 அன்று சென்னையில் நடைபெற்றது.


அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு அலுவலராக பணியாற்றி வரும் கன்னியாகுமரி மாவட்டம் குற்ற பிரிவு குற்ற புலனாய்வு துறை (CBCID) காவல் ஆய்வாளர் சாந்தி -க்கு சென்னை யில் நடைபெற்ற முதல்வர் பதக்கம் வழங்கும் விழா வில் 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் காவல் புலன்விசாரணை சிறப்பு பணி பதக்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின்  வழங்கினார்.



மேற்படி சிறந்த புலன் விசாரணைக்காக சிறப்புப்பணி பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளர் சாந்தி  இன்று (31.05.2022) தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். 


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதல்வர் பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளர் சாந்தியை இதே போன்று மென்மேலும் பதக்கங்கள் பெற்று சிறப்பாக பணியாற்றுமாறு மகிழ்ச்சியுடன் வாழ்த்தி பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக