வெள்ளி, 13 மே, 2022

கவுன்சிலர்கள் நீக்கம் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஈபிஎஸ் ஓபிஎஸ் கூட்டாக நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா (அதிமுக )இருந்து வந்தார். 

இவரது பதவிக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பில் அதிமுகவில் இருந்து கொண்டு திமுகவிற்கு ஆதரவாக ஐந்து பேர் வாக்களித்தனர். 

இதனால் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி காலியாக உள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார். 

மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சத்யா, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்பட்டதால் பதவி காலியானது.



இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஈபிஎஸ் ஓபிஎஸ் கூட்டாக நடவடிக்கை.எடுத்து அறிக்கை விட்டுள்ளார் கள்.

அறிக்கை விவரமாவது:-

தூத்துக்குடி மாவட்டம்

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான

வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின்

ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு

மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும்

உண்டாகும் விதத்தில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மீது

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினாலும்,

. S. அழகேசன்,

(மாவட்ட ஊராட்சிக் குழு 12-வது வார்டு உறுப்பினர்,

ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்,

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் )

S. நடராஜன்,

(மாவட்ட ஊராட்சிக் குழு 3-வது வார்டு உறுப்பினர்,

விளாத்திகுளம் மேற்கு ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர்,

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் )

 N. பாலசரஸ்வதி,

(மாவட்ட ஊராட்சிக் குழு 11-வது வார்டு உறுப்பினர்,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்)

S. தேவராஜ்,

(மாவட்ட ஊராட்சிக் குழு 8-வது வார்டு உறுப்பினர்,

ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணிச் செயலாளர்,

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்)


 S. தேவ விண்ணரசி,

(மாவட்ட ஊராட்சிக் குழு 17-வது வார்டு உறுப்பினர்,

சாத்தான்குளம் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர்,

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் )

டாக்டர் S. குருராஜ்,

(தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் )

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப்பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

ஓ. பன்னீர்செல்வம்

கழக ஒருங்கிணைப்பாளர்

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்

எடப்பாடி K. பழனிசாமி

கழக இணை ஒருங்கிணைப்பாளர்

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 

இவ்வாறு தெரிவித்துள்ளார் கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக