சனி, 14 மே, 2022

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி 133 திருவள்ளுவர் படங்களை ஓவியமாக வரைந்து பள்ளி மாணவன் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை.

தூத்துக்குடி லீக்ஸ் 14-5-2022

உலகப் பொது முறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி தூத்துக்குடியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் உலக சாதனை மேற்கொண்டார். 




தூத்துக்குடி சுப்பையாமுதலியார்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஆல்வின் - முத்துலட்சுமி தம்பதியரின் மகன் தனுஷ் டார்வின் இவர் தூத்துக்குடி சிதம்பரம் நகரில் உள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். 




சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் உடைய மாணவன் தனுஷ் டார்வின் பல்வேறு ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளார்.


மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு ஓவியப் போட்டிகளில் பல விருதுகளை பெற்றுள்ளார். தனக்கு திருக்குறள் மீது கொண்ட பற்றால் அதனை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 133 அதிகாரங்கள் உள்ளதால் 133 திருவள்ளுவர் படங்களை ஓவியமாக வரைந்தார். 

இரண்டு மணி நேரத்தில் வரைந்து முடித்த இந்த ஓவியத்தை புதுச்சேரியில் உள்ள ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணையதளம் மூலம் பதிவு செய்தது.


இந்த சாதனை நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் ஒரு சிறந்த  கார்ட்டூனிஸ்டாக வர வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று மாணவன் தனுஷ் டார்வின் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக