பேரறிவாளன் விடுதலை!
வரவேற்கிறோம் சகோதரா...
தூத்துக்குடி பிரபல வழக்கறிஞர் அரி ராகவன் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தீர்ப்பை வரவேற்று நச் யென்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 142 ல் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 31 ஆண்டுகால சிறைவாசத்திலிருந்து விடுவித்துள்ளது.
நீதிபதிகள்.நாகேஸ்வர ராவ், BR.கவாய், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் கவர்னரின் பரிந்துரைக்கு அனுப்பாமல் பேரறிவாளனை விடுவிப்பு செய்து தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசும் தொடர்ந்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி, நீதிமன்றத்தில் சிறப்பான வாதத்தை வைத்து சூழ்நிலையை சுமூகமாக்கியது.
எழுத்தாளர்கள், பிரபல்யங்கள் உட்பட காங்கிரஸில் உள்ள ஒரு சில தலைவர்களே ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதின் பின்னனியில் சுப்ரமணியன் சுவாமி, சந்திரா சுவாமி உள்ளிட்டவர்களின் சதியும், வல்லரசு நாடுகளின் பின்னனியும் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
அந்த அடிப்படையில் CBl விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்றும் கூறி இருக்கிறார்கள்.
இவ்வளவு ஏன் சிபிஐ இயக்குனர் ராகவனே விசாரணை நேர்மையில்லாமல் ஒரு பக்க சார்பாக நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
பேரறிவாளனை வெளியே விட்டிருக்ககூடாது, கொலைகாரனுக்கு கருணை காட்டக்கூடாது என்றும் நியாயம் பேசுவதாக நினைத்து, தேசத்தந்தை காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை கூட 17 ஆண்டுகளில் நிதிமன்றம் விடுதலை செய்துள்ளதை மறந்து சிலர் பேசுகிறார்கள்.
இன்றைக்கு கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கூட, பெளத்த சிங்கள மக்கள் இனப்படுகொலையில் இறந்தவர் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். தமிழ் மக்களின் ஆராத துயரத்தின் வலியை சிங்கள தேசம் மெல்ல உணர்ந்து வருகிறது.
இன்னும் இங்கே பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து விமர்சனம் செய்து வரும் சிலர் ராஜீவ் காந்தி படுகொலையில் மறைந்து இருக்கும், வெளிநாட்டு சதிகளையும் இணைத்து பார்க்க வேண்டும்.
மற்றபடி உச்ச நீதிமன்றம் கவர்னர் தலையில் கொட்டியுள்ளது. இது போதாது.
தமிழக மக்களும் ஆளுநரின் உச்சந்தலையில் "நங்" என்று சத்தம் கேட்குமாறு கொட்ட வேண்டும்.
அப்பதான் சில பிரச்சினைகளில் நேரங்காலத்தோட நமக்கு நீதி கிடைக்கும்.
கெ. அரி ராகவன்
வழக்கறிஞர்
தூத்துக்குடி
18.05.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக