வியாழன், 19 மே, 2022

CBI விசாரணை வேண்டும் விபத்தா?படுகொலையா? சமுக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்



நெல்லையில் நடந்த கல்குவாரி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக  CBI விசாரணை வேண்டும் விபத்தா?படுகொலையா? சமுக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் செய்கிறது.
இதுபற்றிய செய்தியாவது:-

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், நாங்குநேரி காக்கைகுளம் லாரி ஓட்டுநர் செல்வகுமார் (30), தச்சநல்லூர் ஊருடையார்புரம் லாரி ஓட்டுநர் ராஜேந்திரன்(35), இடையன்குளம் பொக்லைன் ஓட்டுநர் செல்வம் (27), ஆயர்குளம் லாரி கிளீனர் முருகன் (23),விட்டிலாபுரம் முருகன் (40), நாட்டார்குளம் விஜய் (27) ஆகியோர் சிக்கினர்.


அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், காவல் துறையினரும் கடந்த 15-ம் தேதி ஈடுபட்டனர். அதில் விட்டிலாபுரம் முருகன், நாட்டார்குளம் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். 17 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு மீட்கப்பட்ட இடையன்குளம் செல்வம், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.



இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புகுழுவைச் சேர்ந்த 30 பேர் அடைமிதிப்பான்குளம் வந்தனர். அவர்கள் இரு பிரிவாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணி தொடங்கும்போதே, மேலும் பாறைகள் இடிந்துவிழுந்தன. அவற்றை அகற்றி எஞ்சியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆயர்குளத்தை சேர்ந்த லாரி கிளீனர் முருகன் (23) சடலம் மீட்கப்பட்டது. இதனால், இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்ததுள்ளது.

அப்பகுதியில் மண்ணியல் நிபுணர்கள், சுரங்கத்துறை அதிகாரிகள் குழுவினர் மற்றும் மீட்பு ட்ரோன் கருவிகள் படப்பிடிப்பு ???

இதனிடையே, விபத்துக்குள்ளான வெங்கடேஸ்வரா கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜின் ரூ.1 கோடி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 

என்ன தான் அங்கே நடந்து கொண்டிருக்கிறது கல்குவாரி யில் நடந்தது விபத்தா? அல்லது திட்டமிட்ட படுகொலை களா?என உண்மை வெளியே வரவேண்டும்

உழைக்கும் மக்களை காவுகொண்ட களிமவள மாபியாக்களையும், லஞ்ச ஊழல் அதிகாரிகளையும் சிறையில் அடைக்க வேண்டும் .

இதில் சாதி, மதம், 

கட்சி அரசியலைக் கடந்து,

CBI விசாரணை வேண்டும்

என்கிற  கோரிக்கையை வைத்துள்ளது. நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என சமுக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு மற்றும் மள்ளர் பேராயம் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அறிக்கை விட்டுள்ளார்.


தமிழ்மாறன் - 9629721711

தலைமை ஒருங்கிணைப்பாளர், மள்ளர் பேராயம்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக