தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த போராளிகளின் 4ம் ஆண்டு நினைவு நாள் 2022 மே22 முன்னிட்டு வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை - விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி லீக்ஸ் 21-5-2022
தூத்துக்குடி ஸ்டெர்லைட் (22.05.2022) ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உட்கோட்டங்களில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் 30 (2) (Police Act) காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வசவப்பபுரம், செய்துங்கநல்லூர், பெரியதாழை, சங்கரன்குடியிருப்பு, வேம்பார், கோடாங்கிப்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பருத்திக்குளம், சென்னமரெட்டியாபட்டி மற்றும் சவலாப்பேரி உட்பட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு 5 காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 9 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 37 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் இது தொடர்பாக.. இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த பாதுகாப்பு பணியில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரம் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 9 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 127 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர்கள் திருநெல்வேலி மாவட்டம்
சரவணன் இ.கா.ப, தென்காசி கிருஷ்ணராஜ் இ.கா.ப, தேனி டோங்கரே பிரவிண் உமேஷ் இ.கா.ப, ராமநாதபுரம் கார்த்திக் இ.கா.ப மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு ஜெயக்குமார் ஆகியோர்களும், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கோபி, இளங்கோவன், திருநெல்வேலி ராஜூ, மாரிராஜன், தென்காசி கணேஷ் தங்கராஜ், கன்னியாகுமரி வேல்முருகன், ராஜேந்திரன், திண்டுக்கல் லாவண்யா, ராமநாதபுரம் கார்த்திக் உட்பட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட கவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக