வெள்ளி, 29 ஏப்ரல், 2022

தொலைந்து போன கணவனை பஸ் நிலையத்தில் போலீசார் தேடி பிடித்து மீண்டும் மனைவியிடம் ஒப்படைப்பு தூத்துக்குடி காவல்துறை அதிரடி தூத்துக்குடி எஸ்.பி பாராட்டு

மூன்று வருடமாக தொலைந்து போன கணவனை போலீசார் இன்று கோவில் பட்டி பஸ் நிலையத்தில் கண்டு பிடிச்சு மீண்டும் அவரது மனைவி இடம் ஒப்படைத்தனர்.

இதுபற்றிய செய்தியாவது:-

கழுகுமலை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மகன் சின்னத்தம்பி (43) என்பவர்  கடந்த 15.08.2018 அன்று காணாமல்போனதாக அவரது மனைவி கலா (39) என்பவர் அளித்த புகாரின் பேரில கழுகுமலை காவல் நிலைய போலீசார் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்து மேற்படி காணாமல்போன சின்னத்தம்பியை விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர்.

மனைவி இடம் ஒப்படைத்த போலீசார்

தொலைந்து போன கணவர் சின்னதம்பி 


இந்நிலையில் கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், தலைமை காவலர் கண்ணன் மற்றும் கழுகுமலை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சுப்புராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இன்று (29.04.2022) கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்படி காணாமல்போன சின்னத்தம்பி என்பது தெரியவந்தது, 

உடனே போலீசார் அவரை மீட்டு நிலையம் கொண்டு வந்து அவரின் மனைவி கலாவிடம் ஒப்படைத்தனர்.


மேற்படி 3 வருடமாக காணாமல்போன சின்னத்தம்பியை கண்டுபிடித்து மீட்டு அவரது மனைவியிடம் ஒப்படைத்த கழுகுமலை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக