வெள்ளி, 29 ஏப்ரல், 2022

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை மூன்று பேர் கைது

 தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது - 300 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.



இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் மரிய இருதயம் மற்றும் போலீசார் நேற்று (28.04.2022) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது  தாளமுத்துநகர் அலங்காரதட்டு குடோன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் (22), தூத்துக்குடி சுனாமி காலனி நேரு நகரைச் சேர்ந்தவர்களான ரமேஷ் மகன் செல்வம் (26) மற்றும் ஜார்ஜ் மகன் மரிய ஜேசு விஜய் (எ) விஜய் (24) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிவந்தது.

உடனே போலீசார் மணிகண்டன், செல்வம் மற்றும் மரிய ஜேசு விஜய் (எ) விஜய் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சா மற்றும் TN 69 AM 1474 (Honda Shine) என்ற இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 


இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைதுசெய்யப்பட்ட எதிரிகளில் மணிகண்டன் என்பவர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், எதிரி செல்வம் என்பவர் மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், வடபாகம் காவல்நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும், திருத்தங்கல் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக